11 பந்தில் யுவராஜ் சாதனையை உடைத்த திறமையானவர்.. குஜராத்தை விளாசிய யார் இந்த அசுடோஸ் சர்மா

Ashutosh Sharma
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 20204 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் நான்காம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற 17வது லீக் போட்டியில் குஜராத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் போராடி தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் கேப்டன் கில் 89*, சாய் சுதர்சன் 36, ராகுல் திவாட்டியா 26* ரன்கள் எடுத்த உதவியுடன் 200 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் அதைத் சேசிங் செய்த பஞ்சாப்புக்கு கேப்டன் ஷிகர் தவான் 1, ஜானி பேர்ஸ்டோ 22, பிரப்சிம்ரன் சிங் 35, சாம் கரண் 5, சிக்கந்தர் ராசா 15 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 70/4 என சரிந்த பஞ்சாப் வெற்றிக்கு சசாங் சிங் அதிரடியாக விளையாடி போராடினார்.

- Advertisement -

இம்பேக்ட் வீரர்:
அப்போது ஜிதேஷ் சர்மா 16 ரன்னில் அவுட்டானதால் பஞ்சாப் வெற்றி கேள்விக்குறியானது. இருப்பினும் அந்த நேரத்தில் இம்பேக்ட் வீரராக வந்த அசுடோஸ் சர்மா 3 பவுண்டரி 1 சிக்சருடன் 31 (17) ரன்கள் குவித்து திருப்பு முனையை உண்டாக்கி அவுட்டானார். அதை வீணடிக்காமல் கடைசியில் சசாங் சிங் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 61* ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார்.

அந்த வகையில் இப்போட்டியில் கடைசி நேரத்தில் இம்பேக்ட் வீரராக வந்து உண்மையிலேயே வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்திய அசுடோஸ் சர்மா ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார். தற்போது 25 வயதாகும் அவர் மத்தியப்பிரதேசத்தில் பிறந்து 2018ஆம் ஆண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாட துவங்கினார். அதன் பின் ரயில்வேஸ் அணிக்காக விளையாட ஆரம்பித்த அவர் 2023 சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக விளையாடினார்.

- Advertisement -

அந்தப் போட்டியில் சரவெடியாக பேட்டிங் செய்த அவர் வெறும் 11 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் அதிவேகமான அரை சதத்தை அடித்த வீரர் என்ற ஜாம்பவான் யுவராஜ் சிங் சாதனையையும் அவர் உடைத்தார். இதற்கு முன் 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸருடன் 12 பந்துகளில் 50 ரன்கள் அடித்து சாதனை படைத்தது யாராலும் மறக்க முடியாது.

இதையும் படிங்க: 32 வயதில் போராட்டம்.. துரதிஷ்டவசமாக வந்தாலும்.. பஞ்சாப்புக்கு அதிர்ஷ்டமாக மாறிய யார் இந்த சசாங் சிங்

அதன் காரணமாக பஞ்சாப் அணிக்காக 20 லட்சத்திற்கு வாங்கப்பட்ட அவர் கடந்த ஜனவரி மாதம் நடந்த ரஞ்சிக் கோப்பையில் குஜராத்துக்கு எதிராக சதமடித்து அசத்தினர். அதனால் இப்போட்டியில் இம்பேக்ட் வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற அவர் பஞ்சாப் சிறப்பான வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார். இந்த வாய்ப்பைக் கொடுத்த பஞ்சாப் அணிக்கும் ஷிகர் தவானுக்கும் போட்டியின் முடிவில் அவர் நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement