பாண்டியாவின் இந்த முடிவை ஏத்துகவே முடியல.. மும்பை ஓனர் ஸ்ட்ரிக்டான ஆக்சன் எடுக்கனும்.. சேவாக் பேட்டி

Virender Sehwag 8
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகியுள்ளது. குறிப்பாக மே 3ஆம் தேதி 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த மும்பை 12 வருடங்கள் கழித்து வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் கொல்கத்தாவிடம் தோல்வியை சந்தித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை சேசிங் செய்த மும்பைக்கு ரோஹித் சர்மா, இசான் கிசான், ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா போன்ற முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர். அதனால் சூரியகுமார் யாதவ் 56 ரன்கள் எடுத்தும் 18.5 ஓவரில் 145 ரன்களுக்கு சுருண்ட மும்பை பரிதாபமாக தோல்வியை சந்தித்தது. இதையும் சேர்த்து 11 போட்டிகளில் 8வது தோல்வியை பதிவு செய்துள்ள மும்பை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை 99% இழந்துள்ளது.

- Advertisement -

சேவாக் விளாசல்:
இந்த வருடம் மும்பை அணியின் தோல்விக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் பேட்டிங்கில் ஒரு அரை சதம் கூட அடிக்காத அவர் கேப்டனாகவும் முக்கிய முடிவுகளை எடுப்பதில் சொதப்பி வருகிறார். இந்நிலையில் குஜராத் அணியில் 4வது இடத்தில் அற்புதமாக பேட்டிங் செய்த ஹர்திக் பாண்டியா மும்பை அணியில் 7வது இடத்தில் களமிறங்குவது ஏன் என்று வீரேந்திர சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்த வருடத்திற்கான தோல்வி பற்றி பாண்டியா போன்ற வீரர்கள் மீது விசாரணை நடத்தி மும்பை அணியின் உரிமையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சேவாக் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “மும்பை இந்தியன்ஸ் ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட்டை சேமித்தனர். அதைச் செய்து நீங்கள் என்ன சாதித்தீர்கள். எதிர்கொள்வதற்கு நிறைய பந்துகள் இருந்தும் அவர்கள் அவுட்டானார்கள்”

- Advertisement -

“எனவே நீங்கள் முன்கூட்டியே வந்திருந்தால் போட்டியை முன்னதாகவே முடித்திருக்கலாம். மும்பை அணியில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. பாண்டியா, டேவிட் 7, 8வது இடத்தில் பேட்டிங் செய்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை முன்கூட்டியே களமிறங்கினால் அவுட்டாகும் அளவுக்கு இந்த வீரர்கள் மோசமானவர்களா? குஜராத் கேப்டனாக ஹர்திக் பாண்டியா 4வது இடத்தில் தொடர்ச்சியாக விளையாடினார்”

இதையும் படிங்க: கவலைப்படாதீங்க வெளிநாட்டில் அவர் ஃபார்முக்கு வந்துருவாரு.. தனது 2024 டி20 உ.கோ பிளேயிங் லெவனை வெளியிட்ட கவாஸ்கர்

“ஆனால் மும்பை அணியில் என்ன நடந்தது? அதில் நான் குழப்பமடைந்துள்ளேன். மும்பை நிர்வாகம் இந்த வீரர்கள் மீது ஆக்சன் எடுக்க வேண்டும். அது என்ன நடந்தது என்று கேள்வியெழுப்ப வேண்டும். அல்லது ஏன் தங்களுடைய பேட்டிங் வரிசை மாறியது என்பதை வீரர்கள் விளக்க வேண்டும். இங்கே கேப்டன், பயிற்சியாளர் ஆகியோர் மீது தவறு இருக்கிறது. எனவே உரிமையாளர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement