கவலைப்படாதீங்க வெளிநாட்டில் அவர் ஃபார்முக்கு வந்துருவாரு.. தனது 2024 டி20 உ.கோ பிளேயிங் லெவனை வெளியிட்ட கவாஸ்கர்

Sunil Gavaskar 5
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் வெளியிடப்பட்டது. இருப்பினும் அந்த அணி இந்திய ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். முதலில் நடராஜன் போன்ற தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட அந்த அணியில் தேர்வு செய்யப்படாதது தமிழக ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அதே போல இளம் வீரர் ரிங்கு சிங் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளார்.

இத்தனைக்கும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக ரிங்கு சிங் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தலாகவே செயல்பட்டுள்ளார். இருப்பினும் ஐபிஎல் 2024 தொடரில் பெரிய ரன்கள் அடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அவரை தேர்வுக் குழு கழற்றி விட்டுள்ளது. ஆனால் அதே ஐபிஎல் தொடரில் பேட்டிங், பவுலிங் ஆகிய எதிலுமே தாக்கத்தை ஏற்படுத்தாத ஹர்டிக் பாண்டியா மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

கவாஸ்கர் ஆதரவு:
அந்த வகையில் சுமாரான ஃபார்மில் இருக்கும் அவரை இந்தியாவுக்காக தேர்வு செய்யக்கூடாது என்று சில முன்னாள் வீரர்கள் விமர்சித்திருந்தார்கள். ஆனால் அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்துள்ள தேர்வுக்குழு துணை கேப்டனாக தேர்வு செய்துள்ளது. அதனால் இம்முறையும் நாம் கோப்பையை வெல்வது கடினம் என்று இந்திய ரசிகர்களே சமூகவலைதளங்களில் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டுக்காக வெளிநாட்டில் விளையாடும் போது ஹர்திக் பாண்டியா முற்றிலும் வித்தியாசமான வீரராக செயல்படுவார் என்று ஜாம்பவான் சுனில் தெரிவித்துள்ளார். ரசிகர்களின் எதிர்ப்பு உட்பட பல பிரச்சினைகளை சந்திப்பதாலேயே ஐபிஎல் தொடரில் பாண்டியா தடுமாறுவதாகவும் கவாஸ்கர் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கும் நாட்டுக்காக விளையாடுவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. நாட்டுக்காக விளையாடுவது ஒவ்வொரு வீரர்களிடமும் வித்தியாசமான எனர்ஜியை கொண்டு வரும். அங்கே ஹர்திக் பாண்டியா வித்தியாசமான வீரராக செயல்படுவார். ஐபிஎல் தொடரில் அவர் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அவர் சரியாக வழி நடத்தப்படவில்லை”

இதையும் படிங்க: இந்த ரூல்ஸ் வேற லெவல்.. இப்போ தான் ஐபிஎல் நியாயமா நடக்குது.. பிசிசிஐக்கு ஸ்டார்க் பாராட்டு

“வெளிநாட்டுக்கு சென்று இந்தியாவுக்காக விளையாடும் போது அவர் முற்றிலும் வித்தியாசமான மனநிலையில் செயல்படுவார். எனவே உலகக் கோப்பையில் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலும் இந்தியாவின் வெற்றியில் பாண்டியா முக்கிய பங்காற்றுவார்” என்று கூறினார். சுனில் கவாஸ்கரின் 2024 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), யசஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷிதீப் சிங், 11வது இடத்தில் சூழ்நிலையை பொறுத்து சிராஜ் அல்லது அக்சர் படேல்/சஹால்

Advertisement