ஆஸிக்கு கவலையே இல்ல.. இந்தியா வேற லெவல் டீமா இருந்தாலும் தோல்விக்கு இதான் காரணம்.. மிஸ்பா

Misbah Ul Haq 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் கோப்பையை வெல்ல முடியாமல் திண்டாடி வருகிறது. இத்தனைக்கும் சாதாரண இரு தரப்பு தொடர்களில் எதிரணிகளை சொல்லி அடிக்கும் இந்தியா ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்கிறது. ஆனால் ஐசிசி தொடரில் முக்கியமான நாக் அவுட் போட்டியில் ஏதோ ஒரு வகையில் சொதப்பும் இந்தியா கோப்பையை எதிரணிக்கு தாரை வார்த்து வருகிறது.

அதன் உச்சமாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் சொதப்பிய இந்தியா தோல்வியை சந்தித்தது. அதை விட சொந்த மண்ணில் நடந்த 2023 உலகக் கோப்பையில் செமி ஃபைனலில் முதல் முறையாக நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்று உச்சகட்ட ஃபார்மில் இருந்தது. அதனால் கண்டிப்பாக இந்தியா கோப்பை முத்தமிடும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

மிஸ்பா கருத்து:
ஆனால் மீண்டும் அதே ஆஸ்திரேலியாவிடம் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த சூழ்நிலைமையில் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா என்ன செய்யப் போகிறதோ என்பதே ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளின் அதிகப்படியான மக்கள் தொகை கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்துவதாக மிஸ்பா-உல்-ஹக் தெரிவித்துள்ளார்.

ஆனால் அது போன்ற அழுத்தம் ஆஸ்திரேலியாவுக்கு இல்லாததே அந்த அணி வெற்றி பெறுவதற்கு காரணம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “எடுத்துக்காட்டாக ஆஸ்திரேலியாவை பாருங்கள். அவர்கள் இந்த தடைகளை தங்களுடைய வலுவான மனநிலையால் கடந்து வருகின்றனர். அழுத்தமான சூழ்நிலைகள் வரும் போது அவர்களால் அமைதியாக இருக்க முடிகிறது. இதற்கு நேர்மாறாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தங்களது பெரும் மக்கள் தொகை மற்றும் எதிர்பார்ப்புகளால் அழுத்தத்தை எதிர்கொள்கின்றன”

- Advertisement -

“அந்த அழுத்தம் செயல்திறனை கணிசமாக பாதிக்கும். அதனாலேயே கடந்த சில ஐசிசி தொடர்களில் இந்தியா வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்ய முடியாமல் திணறுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு அந்த பிரச்சனை கிடையாது. ஆனால் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு அழுத்தம் என்பது மிகப் பெரிய சவாலாகும். எனவே வருங்காலத்தில் இந்தியா போன்ற அணிகள் எப்படி அதை சமாளித்து வெற்றி காண்கிறார்கள் என்பதை பார்ப்பது சுவாரசியமாக இருக்கும்”

இதையும் படிங்க: நானும் அதையே நெனச்சேன்.. 2007 ஃபைனலில் தோனி எடுத்த அந்த முடிவு ரொம்ப கரெக்ட்.. மிஸ்பா பாராட்டு

“திறமை மற்றும் வலுவான பேட்டிங் வரிசையுடன் இந்தியா தற்போது வித்தியாசமான அணியாக இருக்கிறது. வலுவான பேட்டிங்கை கொண்ட அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்கள் உயரத்தை கண்டுள்ளனர். பும்ரா, ஷமி, சிராஜ், பாண்டியா ஆகியோரால் இந்திய கிரிக்கெட்டின் தரம் உயர்ந்துள்ளது. அதிகப்படியான கிரிக்கெட்டில் விளையாடுவதால் அதிக தன்னம்பிக்கையை பெறும் அவர்கள்

Advertisement