ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் துவக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 16 போட்டிகளில் 776 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்களை அடித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார். மிக இளம் வயதிலேயே ஐ.பி.எல் போட்டிகளில் அதிக ரன்களை அடித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய வீரராகவும் வரலாற்று சாதனை நிகழ்த்தினார்.
என்னுடைய இலக்கு இதுதான் : வைபவ் சூர்யவன்ஷி
அதோடு இந்த ஆண்டு மட்டும் அவர் 72 சிக்ஸர்களை விளாசி அதிக சிக்ஸர்களை அடித்த வீரராகவும் சாதனையின் நிகழ்த்தி இருந்தார். அதோடு இந்த தொடரில் அதிக மதிப்புடைய வீரர், அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடிய வீரர், சிறந்த இளம் வீரர் என ஏகப்பட்ட விருதுகளை வென்றிருந்தார். டி20 போட்டிகளில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவருக்கு இந்திய சர்வதேச அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பலரும் கூறிவருகின்றனர்.
இவ்வேளையில் அவருக்கு இந்திய ஏ அணியில் தற்போதைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டி20 போட்டிகளில் தான் அதிரடியாக விளையாடினாலும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே தன்னுடைய முதன்மை இலக்கு என வைபவ் சூரியவன்ஷி பிரத்தேக பேட்டி ஒன்றில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் ரஞ்சி போட்டியில் விளையாடி அதிகம் பேர் பார்த்ததில்லை. வருங்காலத்தில் நிச்சயம் அதை பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்.
எனது ஆட்டத்தை பார்க்கும் அனைவரும் நான் ஒவ்வொரு பந்தையையும் அடித்து ஆட முயற்சிக்கிறேன் என்று நினைக்கிறார்கள். டி20 போட்டிகளில் இப்படி ஆக்ரோஷமாக விளையாடி தான் ஆக வேண்டும். ஆனால் தேவையில்லாத பந்துகளை நான் அடிப்பதில்லை. எனக்கு டி20 போட்டிகளை தாண்டி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட அதிக விருப்பம் உள்ளது. அதற்கு ஏற்றவாறு என்னை தயார்படுத்தி கொண்டும் வருகிறேன்.
இதையும் படிங்க : இந்திய டி20 கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படும் சூரியகுமார் யாதவ்.. புதிய கேப்டன் போட்டியில் – 3 பேர் வெயிட்டிங்
ஏனெனில் கிரிக்கெட்டின் முழுமையான வடிவம் டெஸ்ட் போட்டி தான் என்று முதல் நாளில் இருந்தே எனது அப்பா சொல்லி சொல்லி என்னை வளர்த்திருக்கிறார். அதற்காக பயிற்சியையும் அவர் எனக்கு வழங்கி இருக்கிறார். எனவே எதிர்காலத்தில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு என சூரியவன்ஷி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



