அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு அடுத்து இந்திய அணி தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இவ்வேளையில் இந்திய டி20 அணியின் கேப்டனான சூரியகுமார் யாதவ் தனது கேப்டன் பதவியை இழக்க காத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார்.
கேப்டன் பதவியை இழக்கப்போகும் சூரியகுமார் யாதவ் :
அவரது தலைமையின் கீழ் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தது. குறிப்பாக 2025 ஆசிய கோப்பை மற்றும் 2026 டி20 உலக கோப்பை என முக்கிய கோப்பைகளை சூரியகுமார் யாதவ் பெற்றுத்தந்தார். அதுமட்டும் இன்றி அவர் தலைமையின் கீழ் இந்திய அணி எந்த ஒரு டி20 தொடரிலும் தோல்வியை சந்திக்காமல் வெற்றிகரமாக திகழ்ந்து வருகிறது.
இருந்தாலும் அவருடைய வயது மற்றும் சமீபத்திய பேட்டிங் ஃபார்ம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு கேப்டன் பதவியிலிருந்து அவர் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் தொடரில் 13 இன்னிங்ஸ்களில் விளையாடிய சூரியகுமார் யாதவ் 270 ரன்களை மட்டுமே எடுத்தார்.
அதன் காரணமாக இந்திய அணியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு டி20 போட்டிகளில் இருந்து அவரது கேப்டன் பதவியை பறிப்பது மட்டுமின்றி அவரது இடத்தை இழக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படி சூரியகுமார் யாதவ் டி20 கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அவருக்கு பதிலாக புதிய கேப்டன் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் முதலிடத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இறுதிப்போட்டி முடிந்த கையோடு வைபவ் சூர்யவன்ஷிக்கு விராட் கோலி கொடுத்த அட்வைஸ் இதுதான் – விவரம் இதோ
ஏனெனில் பேட்டிங் மற்றும் கேப்டன்சி என அசத்தும் அவருக்கு டி20 போட்டிகளில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஆகியோரும் இந்த கேப்டன்சி போட்டியில் இருப்பதாக கூறுகிறார்கள். இருந்தாலும் தேர்வாளர்களின் ஆதரவு ஷ்ரேயாஸ் ஐயருக்கு அதிகம் இருப்பதால் அவர் புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



