இறுதிப்போட்டி முடிந்த கையோடு வைபவ் சூர்யவன்ஷிக்கு விராட் கோலி கொடுத்த அட்வைஸ் இதுதான் – விவரம் இதோ

Kohli and Vaibhav
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூரியவன்சி இந்த ஆண்டு 16 ஆட்டங்களில் விளையாடி ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதம் என 776 ரன்களை குவித்தார். அதோடு மட்டுமின்றி இந்த ஆண்டு அதிக சிக்சர்களை அடிக்க வீரராகவும், அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரராகவும் திகழ்ந்தார்.

வைபவ் சூர்யவன்ஷிக்கு அட்வைஸ் கொடுத்த விராட் கோலி :

மேலும் இந்த சீஸனின் அதிக மதிப்புடைய வீரராகவும், சிறந்த இனம் வீரர் என ஐந்து விருதுகளை வென்று அசத்தினார். இந்தத் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டியின் போது குஜராத் அணியிடம் தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் அணி இந்த தொடரில் இருந்து வெளியேறியது. அதேவேளையில் ஆர்.சி.பி மற்றும் குஜராத் அணிகள் மோதிய இறுதிப்போட்டியை நேரில் வந்து சூர்யவன்ஷி கண்டுகளித்தார்.

- Advertisement -

பின்னர் இந்த போட்டியில் ஆர்.சி.பி அணி வெற்றி பெற்ற பிறகு அந்த அணியின் வீரர்கள் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் மைதானத்திற்கு வந்த வைபவ் சூர்யவன்ஷியை பார்த்து ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி அவரிடம் சில அறிவுரைகளை தோளின் மீது கை போட்டு கூறியிருந்தார்.

அந்த வகையில் விராட் கோலி அவருக்கு கொடுத்த சில அட்வைஸ் என்ன என்பது? குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அந்த வகையில் விராட் கோலி வைபவ் சூர்யவன்ஷியிடம் கூறியதாவது : நீ இன்னும் உயரத்திற்கு செல்ல வேண்டும். நீ இதுவரை என்ன சாதித்து இருக்கிறாயோ அது உனது கடின உழைப்பிற்கும், தன்னம்பிக்கைக்கும் கிடைத்த பரிசு.

- Advertisement -

இதையும் படிங்க : ஐ.பி.எல் கோப்பையை ஆர்.சி.பி வென்றிருக்கலாம்.. ஆனால் சூர்யவன்ஷி செய்தது வேற – பட்லர் பாராட்டு

எனவே வெளியில் இருந்து வரும் கருத்திற்கு செவி சாய்க்காமல் நீ உன்னுடைய ஆட்டத்தில் கவனமாக இரு. நிச்சயம் உன்னால் எந்த ஒரு அணியையும் தனியாக வீழ்த்த முடியும் என வைபவ் சூர்யவன்ஷிக்கு விராட் கோலி அறிவுரை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement