இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் படுமோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது 14 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் 9-வது இடத்தை பிடித்து வெளியேறியது. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி மீதும், அந்த அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியாவின் மீதும் ரசிகர்கள் மிகப்பெரும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
ஹார்டிக் பாண்டியாவோடு சேர்ந்து வெளியேறும் மற்றொரு நட்சத்திர வீரர் :
இதன் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2027 ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து அந்த அணியை மேலும் பலப்படுத்த நிர்வாகம் ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது. இவ்வேளையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹார்டிக் பாண்டியா அந்த பதிவில் இருந்து நீக்கப்பட்டு மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக அவரை டிரேடிங் முறையில் தங்களது அணிக்குள் இணைக்க மற்ற அணிகள் முயற்சி செய்தும் வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆண்டு ஹார்டிக் பாண்டியா மும்பை அணியிலிருந்து வெளியேறி வேறு அணிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வேளையில் ஹார்டிக் பாண்டியா மட்டுமின்றி மற்றொரு நட்சத்திர வீரரான சூரியகுமார் யாதவும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில் 2026 ஐ.பி.எல் தொடரின் போது 16 கோடியே 35 லட்சம் என்று மிகப்பெரிய தொகைக்கு அந்த அணிக்காக விளையாடிய சூரியகுமார் யாதவ் 13 போட்டிகளில் விளையாடி 20 ரன்கள் சராசரியுடன் 270 ரன்களை மட்டுமே குவித்து ஏமாற்றமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அதுமட்டும் இன்றி ஏற்கனவே இந்திய அணியின் கேப்டனாக இருந்த அவரது கேப்டன் பதவி பறிக்கப்பட்டதோடு மட்டுமின்றி இந்திய அணியில் இருந்தும் நீக்கப்பட்டதால் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் அவரது இடம் நீடிக்காது என்று தெரிகிறது.
இதையும் படிங்க : வைபவ் சூர்யவன்ஷி நல்ல பிளேயர் தான்.. அதுல டவுட் இல்ல.. ஆனா ஒரு விடயம் – கபில் தேவ் கருத்து
இதன் காரணமாகவும் மும்பை இந்தியன்ஸ் அணியில் தனது இடத்தை இழக்க அவர் காத்திருக்கிறார். அதிரடி ஆட்டக்காரரான அவர் கேப்டன்சி அனுபவமும் கொண்டவர் என்பதனால் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து அவர் வெளியேறும் பட்சத்தில் நிச்சயம் ஏதாவது ஒரு அணிக்கு டிரேடிங் முறையில் இடம் மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.



