இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரராக களமிறங்கி அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி 776 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக முதலிடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார். அதோடு ஒரு ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்களை அடித்த வீரராக முதலிடத்தில் இருந்த கிரிஸ் கெயிலின் சாதனையையும் அவர் முறையடித்திருந்தார்.
வைபவ் சூர்யவன்ஷி குறித்து பேசிய : கபில் தேவ்
இதன் காரணமாக இந்திய அணியில் சீக்கிரமாக அவரை அறிமுகம் செய்ய வேண்டும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் இலங்கை ஏ அணி மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற முத்தரப்பு தொடரில் இந்திய ஏ அணிக்காக இடம் பெற்றிருந்த வைபவ் சூர்யவன்ஷி அந்த தொடரிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இதன் காரணமாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு எதிரான இந்திய டி20 முதன்மை அணியில் இடம் பெற்றுள்ள வைபவ் சூர்யவன்ஷி 15 வயதிலேயே இந்திய அணிக்காக அறிமுகமாகி சச்சின் டெண்டுல்கரின் வரலாற்று சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார். இவ்வேளையில் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமாக இருக்கும் வைபவ் சூர்யவன்ஷி குறித்து சில கருத்துக்களை இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : வைபவ் சூர்யவன்ஷி தற்போது மிகவும் இளமையான வீரராக இருக்கிறார். அவர் ஒரு ஸ்பெஷல் டேலண்ட் தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனாலும் அவரது திறமையை இப்போதே கணிப்பது மிகப்பெரிய தவறு. ஏனெனில் தற்போது இளம் வயதில் இருக்கும் அவர் 20 – 22 வயது வரும்போது தான் அவருடைய திறன் முழுமையாக வெளிப்படும்.
இதையும் படிங்க : டிரேடிங் முறையில் டெல்லி அணிக்கு சென்ற பின்னர் 3 வார்த்தைகளில் ரிப்ளை கொடுத்துள்ள – ரிஷப் பண்ட்
அப்போதுதான் அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதை நம்மால் கணித்து சொல்ல முடியும். சச்சின் டெண்டுல்கர் 16 வயதில் அறிமுகமாகி இருந்தாலும் அவரது கரியர் மிக நீண்ட காலம் இருந்தது. அதுபோன்ற ஒரு கரியரை வைபவ் சூர்யவன்ஷி கொண்டிருப்பாரா? என்பதை அவரது 20-22 வயது காலம் தான் சரியாக சொல்லும் என கபில் தேவ் கூறியது குறிப்பிடத்தக்கது.



