இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பினை எட்டாமல் வெளியேறியது. ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு அடுத்து புதிய கேப்டனாக வந்த ஹார்டிக் பாண்டியாவின் தலைமையில் மும்பை அணி சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்த்த வேளையில் தொடர்ச்சியான தோல்விகளால் பாண்டியாவின் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளது.
ஹார்டிக் பாண்டியாவின் டிரேடிங் குறித்து : மைக்கல் வாகன் பேச்சு
இதன் காரணமாக இந்த 2026 ஐ.பி.எல் தொடருடன் ஹார்டிக் பாண்டியா மும்பை அணியிலிருந்து நீக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே ஹார்டிக் பாண்டியாவை டிரேடிங் செய்யவும் சில அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. ஏற்கனவே மும்பை அணியிலிருந்து விலகும் முடிவை ஹார்டிக் பாண்டியா எடுத்துவிட்டார் என்று கூறப்படுவதால் பல்வேறு முன்னணி அணிகளும் அவரை இடமாற்றம் செய்ய தற்போது போட்டி போட்டு வருகின்றன.
அந்த வகையில் ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது யாஷஸ்வி ஜெய்ஸ்வால்லை டிரேடிங் செய்து ஹார்டிக் பாண்டியாவை கொண்டு வரும் என்று செய்திகள் வெளியாகிய வேளையில் அந்த டிரேடிங் நிச்சயம் நடைபெறாது என்று தெரிகிறது. அதேவேளையில் சரியான கேப்டன் இன்றி தடுமாறி வரும் கொல்கத்தா அணி ஹார்டிக் பாண்டியாவை தங்களது அணிக்குள் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இவ்வேளையில் கொல்கத்தா அணியின் நிர்வாகம் ஹார்டிக் பாண்டியாவை கொண்டுவர வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து யோசனையை முன்னாள் இங்கிலாந்து வீரரான மைக்கல் வாகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : கொல்கத்தா அணி ஹார்டிக் பாண்டியாவை கொண்டு வந்தால் அஜின்க்யா ரஹானேவை நீக்கிவிட்டு அவரை கேப்டன் பொறுப்பில் அமர்த்தலாம்.
இதையும் படிங்க : ரோஹித் மற்றும் கோலியை தாராளமா 2027 வேர்ல்டுகப்ல விளையாட வைக்கலாம்.. காரணம் இதுதான் – முகமது கைப்
கே.கே.ஆர் அணிக்கு ஹார்டிக் பாண்டியா கேப்டனாகும் பட்சத்தில் ஒரு புதிய அணியோடு நிச்சயம் அந்த அணி பலப்படும் எனவே ஹார்டிக் பாண்டியாவை அவர்கள் தாராளமாக வாங்க முயற்சி செய்யலாம். அதேபோன்று கொல்கத்தா அணியில் விளையாடி வரும் கேமரூன் கிரீனை அவர்கள் விட்டுக் கொடுக்கும் பட்சத்தில் பாண்டியா கே.கே.ஆர் அணிக்குள் வர வாய்ப்புள்ளது என்று மைக்கல் வாகன் கூறியது குறிப்பிடத்தக்கது.



