இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களும், அனுபவ வீரர்களுமான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து ஒருநாள் போட்டியில் மட்டுமே தொடர்ந்து விளையாடி வருகின்றனர். எதிர்வரும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடிவிட்டு சாம்பியன் பட்டத்துடன் ஓய்வுபெற வேண்டும் என்றும் விரும்புகின்றனர். அதனை வெளிப்படையாக அறிவித்த அவர்கள் இருவரும் தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் வாய்ப்பினை பெற்று விளையாடி வருகின்றனர்.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த : முகமது கைப்
ஆனால் 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அவர்களை சேர்ப்பது குறித்து இன்னும் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. இதுகுறித்த விவாதம் கடந்த ஓராண்டாகவே தொடர்ந்து நீடித்து வருகிறது. இவ்வேளையில் எதிர்வரும் 2027 உலக கோப்பை தொடரில் அனுபவ வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை இந்திய அணியில் விளையாட வைக்க வேண்டும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னை பொருத்தவரை அடுத்த 2027 உலக கோப்பை தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாட வேண்டும். ஏனெனில் அவர்களுடைய அனுபவம் இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும். இளம் வீரர்கள் பலருக்கும் அவர்கள் ஒரு உத்வேகத்தை கொடுக்கும் நபர்களாக இருப்பார்கள்.
ரோகித் சர்மாவை பொறுத்தவரை அவருக்கு காயம் ஏற்பட்டாலும் அதனை சிறப்பாக கையாண்டு மீண்டு வந்து அற்புதமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்துகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே அவரது பேட்டிங் அப்ரோச்சை மாற்றியுள்ளார். காயம் என்பது அனைவருக்கும் ஏற்படும் ஒன்றுதான். அதனை சரியாக ரோகித் சர்மா கையாண்டு மீண்டும் சிறப்பான வகையில் கம்பேக் கொடுக்கிறார்.
இதையும் படிங்க : கடந்த சில ஆண்டுகளாக சி.எஸ்.கே அணி இப்படி தடுமாற இதுவே காரணம் – ருதுராஜ் கெய்க்வாட் ஓபன்டாக்
அதேபோன்று விராட் கோலிக்கு இருக்கும் உடற்தகுதிக்கு அவரால் இந்த உலகக் கோப்பை தொடரை எளிதாக விளையாடிவிட முடியும். எனவே அவர்கள் இருவரையும் நிச்சயம் 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பார்க்க விரும்புகிறேன் என முகமது கைஃப் கூறியது குறிப்பிடத்தக்கது.



