சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி வெளியேறியதை அடுத்து புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் கொண்டுவரப்பட்டார். சென்னை அணியின் எதிர்கால நிரந்தர கேப்டனாக பார்க்கப்படும் அவரது தலைமையின் கீழ் சென்னை அணி சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கடந்த சில சீசன்களாகவே சி.எஸ்.கே அணியின் செயல்பாடு மிக மோசமாக இருந்து வருகிறது. இந்த விடயம் சி.எஸ்.கே அணியின் ரசிகர் மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சி.எஸ்.கே அணியின் தடுமாற்றத்திற்கு காரணம் இதுதான் : ருதுராஜ் கெய்க்வாட்
கடந்த 2025 ஆம் ஆண்டு இதுவரை ஐ.பி.எல் தொடரில் இல்லாத அளவு மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் 10-வது இடத்தினை பிடித்து வெளியேறியது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற 2006 ஐ.பி.எல் தொடரிலும் எட்டாவது இடத்தை பிடித்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது. இதன் காரணமாக சி.எஸ்.கே அணியின் நிர்வாகத்தினரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அடுத்தடுத்து சி.எஸ்.கே அணி சறுக்களை சந்தித்து வந்தாலும் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ள அந்த அணியின் நிர்வாகம் தொடர்ந்து அவரை கேப்டனாக செயல்பட வைக்கும் என்பது உறுதி. இவ்வேளையில் கடந்த சில சீசன்களாகவே சி.எஸ்.கே அணி சறுக்கலை சந்தித்து வர என்ன காரணம்? என்பது குறித்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : கடந்த இரண்டு சீசங்களாகவே நாங்கள் எதிர்பார்த்தபடி எதுவும் அமையவில்லை. 2025-ஆம் ஆண்டு நான் கேப்டனாக இருந்தபோது பாதிக்கும் மேலான போட்டிகளை காயம் காரணமாக நான் விளையாட முடியாமல் போனது எங்களது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியது. அதேபோன்று இந்த ஆண்டிலும் எங்களது பிளேயிங் லெவனில் இருந்த நான்கைந்து வீரர்கள் பாதி ஐபிஎல் சீசனை தவறவிட்டனர்.
இதையும் படிங்க : கிரீன் சிக்னல் கொடுத்த பி.சி.சி.ஐ – விராட் கோலி ரசிகர்களை மகிழ்விக்க வெளியான – முக்கிய தகவல்
காயங்களால் எங்களது அணி வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதே கடந்த இரண்டு சீசன்களாக நாங்கள் சறுக்கியதற்கு காரணமாக பார்க்கிறேன். இந்த ஆண்டு கூட தோனி, ஜேமி ஓவர்டன், கலீல் அகமது, ஆயுஷ் மாத்ரே, ராமகிருஷ்ணா கோஷ், நாதன் எல்லிஸ் போன்ற வீரர்கள் காயத்தால் பாதிக்கப்பட்டது எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இதிலிருந்து மீண்டு வந்து நிச்சயம் சிறப்பான நிலையை எட்டுவோம் என ருதுராஜ் கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.



