கிரீன் சிக்னல் கொடுத்த பி.சி.சி.ஐ – விராட் கோலி ரசிகர்களை மகிழ்விக்க வெளியான – முக்கிய தகவல்

Virat Kohli
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் விளையாடியிருந்த போது காயத்தை சந்தித்தார். அதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. இப்படி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை அவர் தவறவிட்டது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்திருந்தது.

விராட் கோலிக்கு கிரீன் சிக்னல் காட்டிய பி.சி.சி.ஐ :

அதனை தொடர்ந்து விராத் கோலி அடுத்ததாக இங்கிலாந்து ஒருநாள் தொடருக்காவது மீண்டும் கம்பேக் கொடுப்பாரா? என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இவ்வேளையில் விராட் கோலியின் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ஒரு முக்கிய செய்தியை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் :

- Advertisement -

விராட் கோலி விளையாட வேண்டுமெனில் தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என பி.சி.சி.ஐ ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் பி.சி.சி.ஐ-யின் அந்த வேண்டுகோளை ஏற்று விராட் கோலி தனது முழு உடற்தகுதியை நிரூபித்ததன் காரணமாக அவர் இங்கிலாந்து தொடரில் விளையாட தடையில்லா சான்றிதழை வழங்கி உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலி விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது. ஜூலை 14-ஆம் தேதி துவங்கும் இந்த ஒருநாள் தொடரானது ஜூலை 19-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடர் இங்கிலாந்து மண்ணில் நடைபெற இருப்பதால் விராட் கோலியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியா இந்த 2 அணிகளுக்கு இடம்மாற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் – எது சாத்தியம்?

மேலும் ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருவதால் அவர் விளையாடும் தொடர்களை காண ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement