குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக பதவியேற்ற முதல் சீசனிலேயே கோப்பையை வென்று கொடுத்த ஹார்டிக் பாண்டியா அதற்கடுத்த ஆண்டும் அந்த அணியை ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வரை கொண்டு சென்றார். இதன் காரணமாக ஹார்டிக் பாண்டியாவின் கேப்டன்சி திறமை வெளிவந்தது. அதனை பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் மீண்டும் ஹார்டிக் பாண்டியாவை தங்களது அணிக்குள் கொண்டு வந்து புதிய கேப்டனாகவும் அறிவித்திருந்தது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்று கூறி ரோகித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது.
ஹார்டிக் பாண்டியா செல்ல வாய்ப்புள்ள 2 அணிகள் :
ஆனால் ஹார்டிக் பாண்டியாவின் தலைமையில் மும்பை அணி எதிர்பார்த்த அளவு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை. நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி ஏமாற்றம் அளித்தது. அதோடு 2026 ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை இல்லாத அளவு மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் ஹர்திக் பாண்டியாவை வெளியேற்ற அந்த அணியின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
எனவே 2027 ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக அவர் வேற ஏதாவது அணிக்கு மாறுவார் என்பது உறுதி. இவ்வேளையில் அடுத்த 2027 ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக டிரேடிங் முறையில் ஹார்டிக் பாண்டியாவின் இடமாற்றம் நிகழலாம் என்றும் அதுவும் கூடிய விரைவில் அது குறித்த தகவல் உறுதியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே ஹார்டிக் பாண்டியா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு செல்கிறார் என்றும் அங்கிருந்து யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை அணிக்கு டிரேடிங் செய்யப்படுவார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.
ஆனால் ஜெய்ஸ்வாலை விட்டுக்கொடுத்து ஹார்டிக் பாண்டியாவை வாங்க ராஜஸ்தான் அணியின் நிர்வாகம் விரும்பாது என்பதனால் இந்த டிரேடிங் நடைபெற வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது. அதேபோன்று ரியான் பராக் அந்த அணியின் நீண்ட கால கேப்டனாக பார்க்கப்படுவதால் ஹார்டிக் பாண்டியாவை தேவையில்லாமல் அவர்கள் வாங்க மாட்டார்கள். அதே வேளையில் கொல்கத்தா அணி ஹார்டிக் பாண்டியாவை டிரேடிங் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் அஜின்க்யா ரஹானே தலைமையில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் வேளையில் அவரை நீக்கிவிட்டு புதிய இளம் கேப்டனை நியமிக்க விரும்புவார்கள்.
இதையும் படிங்க : காயமடைந்து வெளியேறிய நிதீஷ் ரெட்டிக்கு பதிலாக இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற 23 வயது வீரர் – யார் இவர்?
அப்படி கே.கே.ஆர் அணி முடிவு செய்தால் ஹார்டிக் பாண்டியா அங்கு செல்ல வாய்ப்புள்ளது. ஆனால் ஹார்டிக் பாண்டியா கே.கே .ர் அணிக்கு செல்லும் பட்சத்தில் கே.கே.ஆர் அணியிலிருந்து எந்த வீரர் மும்பை அணிக்கு செல்வார் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. ஆனாலும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய நிர்வாகங்களுக்கு இடையே ஒப்புதல் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் ஹார்டிக் பாண்டியா கே.கே.ஆர் அணிக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.



