ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது அடுத்ததாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளில் நடைபெற இருக்கும் டி20 தொடர்களில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி சென்னையில் இருந்து அயர்லாந்து நாட்டிற்கு புறப்படப்பட்டது. அந்த வகையில் அயர்லாந்து அணிக்கு எதிராக முதலில் நடைபெற இருக்கும் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாட இருக்கிறது.
நிதீஷ் ரெட்டிக்கு மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்ட 23 வயது வீரர் :
அதன் பின்னர் அங்கிருந்து இங்கிலாந்து சென்றடைந்து அங்கு நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களுக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான நிதீஷ் ரெட்டி காயம் காரணமாக விலகியதாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே ஹார்திக் பாண்டியா காயம் காரணமாக இவ்விரு தொடர்களிலும் விளையாட முடியாத சூழ்நிலையில் நிதீஷ் ரெட்டியும் காயம் காரணமாக விலகியுள்ளது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இவ்வேளையில் நிதீஷ் ரெட்டிக்கு பதிலாக யார் இந்த தொடருக்கான இந்திய அணியில் இணைவார்கள்? என்ற கேள்வி அதிகளவில் இருந்து வந்தது.
இவ்வேளையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக மும்பையை சேர்ந்த 23 வயதான இளம் ஆல்ரவுண்டர் சூர்யான்ஷ் ஷெட்கே இந்த இரண்டு தொடர்களுக்குமான இந்திய டி20 அணியில் இடம் பிடித்துள்ளார். இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ஏ அணியில் இடம் பிடித்திருந்த அவர் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.
இதையும் படிங்க : உறுதி செய்யப்பட்ட ரிஷப் பண்ட் – குல்தீப் யாதவ் டிரேடிங்.. பெரிய தொகை குறைப்புக்கு பிறகு – அணி மாறிய ரிஷப் பண்ட்
அந்தவகையில் இலங்கை நாட்டில் நடைபெற்ற 5 போட்டிகளில் விளையாடிய அவர் 147 ரன்கள் குவித்ததோடு மட்டுமின்றி பந்துவீச்சிலும் 23 ஓவர்கள் வீசியிருந்தார். இப்படி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அசத்தம் அவருக்கு முதல் முறையாக இந்திய தேசிய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



