ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரராக களமிறங்கி விளையாடிய 15 வயதான வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது மறக்க முடியாத சீசனாக மாறியுள்ளது. மேலும் அவரைப் பற்றியே கடந்த இரண்டு மாதங்களாக பலரும் பேசி வருகின்றனர். ஏனெனில் இந்த ஆண்டு மார்ச் மாதம் 15 வயதை பூர்த்தி செய்த வைபவ் சூர்யவன்சி தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் உலக கிரிக்கெட்டை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
இந்திய அணியில் இடம் பிடிக்கப்போகும் வைபவ் சூர்யவன்ஷி :
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரராக இந்த ஆண்டு மட்டும் 16 போட்டிகளில் விளையாடிய அவர் ஒரு சதம் மற்றும் 5 அரைசதம் என 776 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக ஆரஞ்சு தொப்பிபையும் கைப்பற்றி இருந்தார். அதோடு ஒரே சீசனில் 72 சிக்ஸர்களை விளாசி பலரையும் வியக்க வைத்துள்ளார்.
அவரது இந்த அதிரடியான ஆட்டம் காரணமாக இந்திய டி20 அணியில் இடம் வழங்க வேண்டும் என்று பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். இவ்வேளையில் வைபவ் சூர்யவன்ஷியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் வெளியான தகவலின் படி :
ஆப்கானிஸ்தான் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி அடுத்ததாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு துவக்க வீரருக்கான இடம் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பிசிசிஐ அதற்கான ஏற்பாடுகளிலும் தீவிரம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : இந்த பையன் மட்டும் ஏலத்திற்கு வந்தா விராட் கோலியை விட அதிக தொகைக்கு போவான் – மைக்கல் கிளார்க் கருத்து
ஏற்கனவே சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் துவக்க வீரர்களாக இருந்தாலும் சுழற்சி முறையில் அவரை பயன்படுத்த பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் வெகு விரைவில் இந்திய டி20 அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.



