இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கைப்பற்றி அசத்தியது. கடந்த ஆண்டு முதல் முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்ற ஆர்.சி.பி அணி இந்த ஆண்டும் தங்களது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இதன்மூலம் விராட் கோலி தற்போது இரண்டாவது முறையாக ஐ.பி.எல் கோப்பையை பெற்றுள்ளார்.
விராட் கோலியை விட இந்த வீரர் அதிக விலைக்கு செல்வார் : மைக்கல் கிளார்க்
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் விராட் கோலி பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வரும் வேளையில் இன்றளவும் மிகப்பெரிய தொகைக்கு அந்த அணியால் தக்கவைக்கப்பட்டு வருகிறார். அந்த அளவிற்கு அவர் ஒரு அற்புதமான வீரராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் விராட் கோலியை விட வைபவ் சூர்யவன்ஷி இந்த ஆண்டு பெரியளவில் கவனத்தை ஈர்த்துள்ளார் என்று பலரும் கூறி வருகின்றனர்.
இவ்வேளையில் ஐ.பி.எல் ஏலத்திற்கு மட்டும் வைபவ் சூர்யவன்ஷி இந்த ஆண்டு வந்திருந்தால் விராட் கோலியை விட அதிக தொகைக்கு சென்றிருப்பார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் சந்தேகத்திற்கு இடமின்றி சூரியவன்ஷி தான் அனைவராலும் பேசப்படும் வீரராக இருக்கிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அந்த அணியின் பலமாகவும் தற்போது மாறியுள்ளார். இந்த ஆண்டு மட்டும் மெகா ஏலம் நடைபெற்று அதில் அவர் பங்கேற்று இருந்தால் நிச்சயம் எந்த ஒரு வீரரையும் விட அதிக தொகைக்கு அவர் சென்றிருப்பார்.
இதையும் படிங்க : நான் அதிரடியா அடிச்சி விளையாடுறனு தான் எல்லாரும் சொல்றாங்க.. ஆனா என் ஆசை இதுதான் – சூர்யவன்ஷி பேட்டி
ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு தலைசிறந்த வீரர் இருப்பார்கள். அந்த வகையில் இந்த தலைமுறையின் சிறந்த வீரராக நான் வைபவ் சூர்யவன்ஷியை பார்க்கிறேன் என மைக்கேல் கிளார்க் கூறியது குறிப்பிடத்தக்கது.



