டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்த சூரியகுமார் யாதவ் – மேலும் ஒரு வீரரும் அசத்தல்

SKY
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்ற முடியும் தொடர்களுக்கு மத்தியில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்குமான தரவரிசை பட்டியலையும் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்தியாவில் ஐபிஎல் தொடரானது நடைபெற்று வரும் வேளையில் டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது.

அதன்படி ஐசிசி வெளியிட்ட இந்த தரவரிசை பட்டியலில் டி20 பேட்ஸ்மேன்கள் பட்டியலை பொறுத்த வரை இந்திய அணியின் நட்சத்திர வீரரான சூரியகுமார் யாதவ் 861 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

- Advertisement -

அவருக்கு அடுத்து இங்கிலாந்து அணியை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரான பிலிப் சால்ட் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் (781 புள்ளிகள்) மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர்.

அதேபோன்று இந்த பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் மற்றொரு இந்திய வீரரான இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 714 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை இங்கிலாந்து அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அதில் ரஷீத் முதலிடத்தில் நீடிக்கிறார். அவருக்கு அடுத்து இலங்கை வீரர் வனிந்து ஹஸரங்கா இரண்டாவது இடத்திலும், அகில் ஹுசேன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெற இப்படியும் ஒரு வழி இருக்கு – முழுவிவரம் இதோ

அதேபோன்று இந்திய வீரர்களான அக்சர் பட்டேல் நான்காவது இடத்திலும், ரவி பிஷ்னாய் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலை பொறுத்தவரை இந்தியாவை சேர்ந்த ஹார்டிக் பாண்டியா ஏழாவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement