இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் பிளே ஆப் சுற்றில் விளையாட ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் தகுதி பெற்றுவிட்டன. அதோடு பிளே ஆப் சுற்றுக்கான பயிற்சியிலும் அவர்கள் ஈடுபட துவங்கி விட்டனர்.
அதனைத்தொடர்ந்து நான்காவது அணியாக இந்த பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது எந்த அணி? என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய 2 அணிகளில் ஒருவருக்கே அந்த வாய்ப்பு எஞ்சியுள்ளது.
அதன்படி நாளை மே 18-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கும் பெங்களூரு மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி 13 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளை பெற்றுள்ளது. நாளைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் நேரடியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடும்.
ஒருவேளை தோல்வி அடைந்தால் அது மோசமான தோல்வியாக இருக்ககூடாது. அதாவது பெங்களூரு அணியானது 14 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 11 பந்துகள் மீதம் இருக்குதோ சென்னை அணியை வீழ்த்தினால் சென்னை அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிடும். அதனால் மோசமான தோல்வியை சிஎஸ்கே அணி பெறக்கூடாது.
இதையும் படிங்க : அவர் அடிக்கலன்னா இந்தியா டி20 உ.கோ ஜெயிக்க வாய்ப்பில்லை.. ஆஸிக்கும் இதே நிலை தான்.. டிம் பைஃன்
அதேபோன்று ஒருவேளை மழை பெய்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகளை கொடுத்தால் கூட நேரடியாக சென்னை அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற ஒரு வழி இருக்கிறது. தோனியின் கடைசி சீசனாக பார்க்கப்படும் இந்த தொடரில் சென்னை அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.



