அவர் அடிக்கலன்னா இந்தியா டி20 உ.கோ ஜெயிக்க வாய்ப்பில்லை.. ஆஸிக்கும் இதே நிலை தான்.. டிம் பைஃன்

Tim Paine
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் நடராஜன், ரிங்கு சிங் போன்ற வீரர்கள் இடம் பெறாதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அதனால் இம்முறையும் கோப்பையை வெல்லப்போவதில்லை என்று இந்திய ரசிகர்களே நம்பிக்கையற்று காணப்படுகின்றனர்.

ஏனெனில் கடந்த வருடம் ரோஹித் சர்மா தலைமையில் நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை ஃபைனல்களில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால், சிவம் துபே போன்ற அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இந்தியாவுக்கு வாய்ப்பில்லை:
எனவே 2007க்குப்பின் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தி இம்முறை டி20 உலகக் கோப்பையை வெல்ல ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முழுமூச்சுடன் போராடும் என்று நம்பலாம். இந்நிலையில் விராட் கோலி வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தத் தவறும் பட்சத்தில் இந்தியா உலகக் கோப்பையை வெல்லாது என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பைஃன் கூறியுள்ளார். அதே போல மேக்ஸ்வெல் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினால் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெறாது என்று அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் வரை இந்தியா உலகக் கோப்பையை வெல்வதை நான் பார்க்கப் போவதில்லை. அதே போல மேக்ஸ்வெல் ஃபார்ம் முக்கியமானது. அவர் முன்பு போல் தற்போது நல்ல ஃபார்மில் இல்லை என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் அவர் எதாவது கண்மூடித்தனமாக செய்யாத வரை ஆஸ்திரேலியா உலகக் கோப்பை வெல்வதையும் நான் பார்க்கப் போவதில்லை” என்று கூறினார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தற்போது நடைபெறும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்துள்ள விராட் கோலி ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். எனவே அவர் நல்ல ஃபார்மில் இருப்பது டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு பலத்தை சேர்க்கும் என்றால் மிகையாகாது. இருப்பினும் 2023 உலகக் கோப்பையில் விராட் கோலி 765 ரன்கள் அடித்தார்.

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார்ஸ் இருந்தா மட்டும் படம் ஓடுமா? 2 பேரை வெச்சுகிட்டு மத்தவங்களை மும்பை விடுவிக்கனும்.. சேவாக் அதிரடி

அதனால் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை முந்தி ஒரு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்த விராட் கோலி தொடர்நாயகன் விருதையும் வென்றார். ஆனாலும் மாபெரும் இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மாவை தவிர்த்து மற்ற வீரர்கள் சுமாராக செயல்பட்டனர். அதனால் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்ற இந்தியா கடைசியில் ஃபைனலில் பரிதாபமாக தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கதது.

Advertisement