ஒரே சேன்ஸ் தான் குடுத்தேன்.. மும்பை அணியை முடிச்சி விட்டுட்டாரு.. சீனியர் வீரரை பாராட்டிய – ஷ்ரேயாஸ் ஐயர்

Shreyas
- Advertisement -

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 51-வது லீக் போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது மும்பை அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதோடு மும்பை அணியின் பிளேஆப் சுற்று வாய்ப்பிற்கான கதவையும் கிட்டத்தட்ட இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி மூடியுள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களை குவித்தது. பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு மும்பை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

மும்பை அணியினர் இந்த இலக்கினை வெகு எளிதாக எட்டிப் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் துவக்கத்திலிருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த மும்பை அணியானது 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 24 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

மும்பை அணியின் இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதே வேளையில் கொல்கத்தா அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் அவர்கள் இரண்டாவது இடத்தில் வலுவான நிலையில் உள்ளனர். இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் :

- Advertisement -

இந்த போட்டிக்கு முன்னதாக நாங்கள் ஸ்டார்க்கிடம் இந்த போட்டி எவ்வளவு முக்கியமானது என்று பேசியிருந்தோம். ஒருவேளை இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் கடைசி நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்றாக வேண்டிய சூழல் இருந்திருக்கும். ஆனால் இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தேடி தந்துள்ளனர். இந்த வெற்றி மிகவும் அற்புதமான ஒன்று. இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இருந்தது இந்த போட்டியில் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்தது.

இதையும் படிங்க : ரசிகர்களை விடுங்க.. அவங்களே பாண்டியாவை கேப்டனா ஏத்துக்கல.. மும்பையை ஃபினிஷ் பண்ணிட்டாரு.. இர்பான் பதான் விமர்சனம்

மணிஷ் பாண்டே முதல் நாளிலிருந்து வாய்ப்புக்காக காத்திருந்தார். அந்த வகையில் இன்று தான் அவருக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது. அதிலேயே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களுக்கு நல்லதொரு ஸ்கோரை எட்ட பெரிய உதவி செய்திருந்தார். அவரது ஆட்டம் இந்த போட்டியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதோடு எங்களிடம் இருக்கும் பந்துவீச்சாளர்களை வைத்து இந்த இலக்கில் சுருக்க முடியும் என்று நான் வீரர்களிடம் நம்பிக்கையாக கூறினேன். அந்த வகையில் இந்த வெற்றியை பெற்றதில் மகிழ்ச்சி என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement