இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 67-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்தது. லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 75 ரன்களையும், கே.எல் ராகுல் 55 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் மட்டுமே குவித்ததால் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி சார்பாக ரோஹித் சர்மா 68 ரன்களையும், நமன் தீர் 62 ரன்களையும் குவித்தனர்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் : உண்மையிலேயே இந்த தோல்வி மிகவும் வருத்தமாக உள்ளது. நாங்கள் குவாலிட்டியான கிரிக்கெட்டை விளையாடவில்லை.
இந்த தொடர் முழுவதுமே நாங்கள் தோல்வியை சந்திக்க எங்களின் மோசமான ஆட்டம் தான் காரணம். தற்போதைய கிரிக்கெட் ஒரு தொழிமுறையான கிரிக்கெட். இங்கு நாம் வெற்றி பெற வேண்டுமெனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும். ஒருவேளை ஒரு குழுவாக நம்மால் ஒரு தரமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
இதையும் படிங்க : இதெல்லாம் தேவையா.. ஒரே ஓவரில் 29 ரன்ஸ்.. தேவையின்றி முறைத்து மூச்சு வாங்கிய அர்ஜுன்.. பாதியிலேயே பரிதாபம்
இதனால் நிச்சயம் இதுபோன்ற தோல்வியை சந்திக்கத்தான் வேண்டும். இந்த தோல்வி எங்கு ஏற்பட்டது என்று குறிப்பிட்டு காட்டுவது இயலாத ஒன்று இருப்பினும் அனைத்தும் எங்கள் வழியில் செல்லவில்லை என்பது தெரிகிறது என ஹார்டிக் பாண்டியா பேசியது குறிப்பிடத்தக்கது.



