- Advertisement -
ஐ.பி.எல்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக மாற இருக்கும் முன்னாள் இந்திய வீரர் – யார் தெரியுமா?

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. இந்த தொடர் முழுவதுமே பலமான அணியாக பார்க்கப்பட்ட அவர்கள் எந்த ஒரு இடத்திலும் பெரிய சறுக்களை சந்திக்காமல் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசைக்க முடியாத அணியாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினர்.

அதே வேளையில் ஷிகார் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது 14 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகள் மற்றும் 9 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் வெறும் 10 புள்ளிகளை மட்டுமே எடுத்து ஒன்பதாவது இடத்தை பிடித்து வெளியேறி இருந்தது.

- Advertisement -

இப்படி பஞ்சாப் கிங்ஸ் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெளியேறியுள்ளதால் அந்த அணியின் நிர்வாகம் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்தது. இந்நிலையில் எதிர்வரும் 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக பல முக்கிய மாற்றங்களை அந்த அணியின் நிர்வாகம் எடுக்க காத்திருக்கின்றன.

அந்த வகையில் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த பெய்லிஸ் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு அந்த அணி புதிய பயிற்சியாளரை நியமிக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாபரை புதிய பயிற்சியாளராக நியமிக்க அந்த அணியின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

46 வயதாகும் வாசிம் ஜாபர் இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டியிலும், இரண்டு ஒருநாள் போட்டியிலும் விளையாடியுள்ளார். அதோடு ஏற்கனவே பஞ்சாப் அணிக்காக 2019-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை பேட்டிங் பயிற்சியாளராகவும் அவர் இருந்து வந்துள்ளார்.

இதையும் படிங்க : ரோஹித் உருவாக்கிய ட்ரெய்ன் அப்படியே ஓடும்.. அவர்கிட்ட கத்துக்கிட்ட இதைத்தான் நான் செய்வேன்.. சூரியகுமார் பேட்டி

இந்நிலையில் அவரை அணியின் முதன்மை பயிற்சியாளராக கொண்டு வந்து அவரது தலைமையில் பஞ்சாப் பணியை வலுவாக கட்டமைக்க அந்த அணி நிர்வாகம் நினைப்பதால் நிச்சயம் வாசிம் ஜாபர் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட இருப்பது உறுதியாகியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் குறைவு என்றாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் ஏகப்பட்ட அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -