
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாடி வருகிறார். எதிர்வரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ள அவர் அந்த தொடரோடு சர்வதேச போட்டிகள் அனைத்தில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது.
தற்போது 39 வயதாகும் ரோஹித் சர்மாவின் கரியர் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த ஆண்டு வரை அவர் தொடர்ந்து விளையாட வேண்டுமெனில் தனது பிட்னஸ் மற்றும் பேட்டிங் ஃபார்ம் ஆகியவற்றை தொடர்ந்து நிரூபிக்க வேண்டியது அவசியம்.
அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரும் அவருக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஜூலை 14-ம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கு தயாராகும் வகையில் ரோகித் சர்மா தற்போது முன்கூட்டியே இந்தியாவில் இருந்து இங்கிலாந்து நாட்டிற்கு சென்றடைந்து அங்கு தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் மட்டுமே ரோகித் சர்மா விளையாடி இருந்தார்.
இதையும் படிங்க : 5 ஆவது இந்திய வீரராக டி20 போட்டிகளில் அசத்தல் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் அக்சர் படேல் – விவரம் இதோ
இதன் காரணமாக சரியான பார்ம் அவசியம் என்பதனாலும் இங்கிலாந்து சூழலில் தகவமைத்து விளையாடும் வகையிலும் அவர் தற்போது முன்கூட்டியே அங்கு சென்று பேட்டிங் பயிற்சியை துவங்கி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே லண்டன் சென்றடைந்த ரோகித் சர்மா தனது பயிற்சியாளர்களுடன் அங்கு தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.