
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் நம்பர் 1 அணியாக இருக்கும் இந்திய அணி தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள இந்திய அணி மிகப்பெரும் ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு அளித்துள்ளது.
அதோடு இனிவரும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்ய முடியும் என்பதனால் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அடைந்த தோல்வி குறித்து முன்னாள் இந்திய கேப்டனான அணில் கும்ப்ளே கடுமையான சில விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய பேட்ஸ்மேன்கள் இன்னும் பொறுமையையும், அர்ப்பணிப்பையும் காட்டியிருக்க வேண்டும். அதிரடியாக விளையாட முயற்சித்து இங்கிலாந்து அணிக்கு எதிராக வீழ்ந்துள்ளனர். வெற்றிக்கு ஓவருக்கு 10 ரன்கள் விகிதம் தேவை இருந்தாலும் யாராவது ஒருவர் பொறுப்புடன் விளையாடி இறுதி வரை பேட்டிங் செய்திருக்க வேண்டும்.
ஆனால் ஆக்ரோஷமான பாதையைத் தேர்ந்தெடுத்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட் இழந்ததே தோல்விக்கு காரணமாக பார்க்கிறேன். அதேபோன்று ஹர்ஷித் ராணாவை ஷிவம் துபேவிற்கு முன்னதாக பேட்டிங் செய்ய அனுப்பியது மிகப்பெரிய தவறு.
இதையும் படிங்க : இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கு தயாராகும் வகையில் ரோஹித் சர்மா எடுத்த முடிவு – விவரம் இதோ
ஒரு சிறந்த பேட்ஸ்மேனை எப்போதும் அவரது இடத்தில் விளையாட வைக்க வேண்டும் அதேபோன்று பந்து வீச்சாளர்களையும் ஒவ்வொரு போட்டியிலும் மாற்றுவதை நிறுத்த வேண்டும் என அணில் கும்ப்ளே கூறியது குறிப்பிடத்தக்கது.