
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியானது நேற்று பிரிஸ்டல் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்றியது.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்தது. பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 159 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது : என்னுடைய பேட்டிங் இந்த போட்டியில் சிறப்பாக இருந்தது ஆனால் அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை என்பதனால் அது வீணாகி விடும். நிச்சயம் இந்த போட்டியில் தோல்வி அடைந்ததில் ஏமாற்றம் அடைகிறேன்.
ஏனென்றால் நான் எப்போதும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து செல்லவே விரும்புவேன். ஆனால் இன்றைய நாள் எங்களுடையதாக அமையவில்லை. நாங்கள் அடுத்தடுத்த தோல்விகளை சந்திக்க காரணம் யாதெனில் : தற்போது இந்திய அணியில் ஒரு மாற்றம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் சில தவறுகள் நடக்கத்தான் செய்யும்.
இதையும் படிங்க : இதுக்காகவா இங்கிலாந்து நாட்டுக்கு போனீங்க.. இந்திய அணியின் தவறை விமர்சித்த – அணில் கும்ப்ளே
இங்குள்ள சூழலுக்கு ஏற்றவாறு வீரர்கள் தங்களை தகவமைத்து கொள்ள வேண்டியது அவசியம். அணியில் உள்ள வீரர்கள் பெரும்பாலும் இளம் வீரர்கள் என்பதாலும் இதுவே அவர்கள் இங்கு முதல் முறையாக விளையாடுகிறார்கள் என்பதனாலும் தடுமாற்றம் நடைபெற்று வருகிறது நிச்சயம் இந்த தவறுகளில் இருந்து வேகமாக பாடங்களை கற்றுக் கொள்வார்கள் என்று நம்புவதாகவும் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.