இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 27ஆம் தேதி துவங்குகிறது. அதில் ஓய்வு பெற்ற ஜாம்பவான்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்தியாவுக்காக விளையாடப் போவதில்லை. அத்துடன் புதிய கேப்டன் சூரியகுமார் யாதவ் தலைமையில் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வழிகாட்டுதலில் இந்தியா களமிறங்குகிறது.
சமீப காலங்களாக தொடர்ந்து ஐசிசி தொடர்களில் இந்தியா தோல்விகளை சந்தித்து வந்தது. குறிப்பாக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலும் இந்தியா 2022 டி20, 2023 உலகக் கோப்பைகளில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் மனம் தளராத ரோஹித் சர்மா சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை அடித்து நொறுக்கினால் மட்டுமே உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்ற அணுகுமுறையை கொண்டு வந்தார்.
ரோஹித் சர்மாவின் இரயில்:
அதைப் பின்பற்றி 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடிய இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது. இருப்பினும் தற்போது அவர் ஓய்வு பெற்றதை தொடர்ந்து சூரியகுமார் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். பொதுவாகவே ஒவ்வொருவரும் வித்தியாசமாக சிந்திப்பார்கள் என்ற சூழ்நிலையில் சூரியகுமார் என்ன செய்யப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரோஹித் சர்மா உருவாக்கிய இந்திய அணி எனும் ரயில் தமது தலைமையிலும் அப்படியே ஓடும் என சூரியகுமார் தெரிவித்துள்ளார். இது பற்றி முதல் போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “அதே ரயில் தொடர்ந்து முன்னோக்கிச் செல்லும். இன்ஜின் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. மற்ற அனைத்தும் மாறவில்லை”
“இந்திய அணியில் கேப்டன் மாறினாலும் எதுவும் மாறவில்லை. நாங்கள் விளையாடிய கிரிக்கெட்டின் பிராண்ட் அப்படியே தான் உள்ளது. கேப்டன்ஷிப் எதையும் மாற்றாது. அது எனக்கு கொடுக்கப்பட்ட எக்ஸ்ட்ரா பொறுப்பாகும். அதன் காரணமாக தற்போது நான் பேசுவதற்கு வருகிறேன் என்பது நல்லது. களத்திற்கும் களத்திற்கு வெளியேயும் ரோகித் கேப்டனாக இருந்தார் என்பதே நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டதாகும்”
இதையும் படிங்க: பேட்ஸ்மேன்கள் அடிச்சப்போ.. தோனி தான் எனக்கு அந்த வித்தையை கத்துக் கொடுத்தாரு.. மஹீஸ் தீக்சனா பேட்டி
“அவர் கேப்டனாக மட்டுமில்லை. அணிக்கு நடுவே நின்ற அவர் மக்களுக்கு வழிகாட்டிய தலைவர். டி20 கிரிக்கெட்டை எப்படி விளையாடி தொடரை எப்படி வெல்ல வேண்டும்? என்பதே அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டதாகும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 2026 டி20 உலகக் கோப்பையிலும் சூரியகுமார் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



