பேட்ஸ்மேன்கள் அடிச்சப்போ.. தோனி தான் எனக்கு அந்த வித்தையை கத்துக் கொடுத்தாரு.. மஹீஸ் தீக்சனா பேட்டி

Mahees Theekshana
- Advertisement -

இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 27ஆம் தேதி துவங்குகிறது. சமீப காலங்களாகவே தடுமாறி வரும் இலங்கை அணி 2024 டி20 உலகக் கோப்பையில் முதல் சுற்றுடன் வெளியேறியது. அதனால் வீழ்ச்சியை சந்தித்துள்ள அந்த அணி இம்முறை புதிய கேப்டன் அசலங்கா மற்றும் பயிற்சியாளர் ஜெயசூர்யா தலைமையில் களமிறங்குகிறது.

மறுபுறம் 2024 டி20 உலகக் கோப்பையை வென்று சாம்பியனாக சாதனை படைத்த இந்திய அணி புதிய கேப்டன் சூரியகுமார் தலைமையில் களமிறங்குகிறது. குறிப்பாக விராட், ரோகித் இல்லையென்றாலும் ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், சிராஜ் போன்ற நிறைய தரமான வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர். எனவே இம்முறையும் இலங்கையை அதன் சொந்த மண்ணில் இந்தியா தோற்கடிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

தோனியின் உதவி:
அதே சமயம் இந்தத் தொடரில் இந்தியாவுக்கு மதிஷா பதிரனா மற்றும் மகேஷ் தீக்சனா ஆகியோர் மிகப்பெரிய சவாலை கொடுப்பார்கள் என்றே சொல்லலாம். ஏனெனில் கடந்த சில வருடங்களாக எம்.எஸ். தோனி தலைமையில் ஐபிஎல் தொடரில் விளையாடிய அவர்கள் சிஎஸ்கே 2023 கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினர்.

குறிப்பாக சமீபத்திய வருடங்களில் ஜடேஜாவுக்கு நிகராக ஸ்பின்னராக அசத்தி வரும் தீக்சனா சிஎஸ்கே அணிக்காக 25 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்நிலையில் பேட்ஸ்மேன்கள் தம்மை ஸ்வீப் ஷாட்டுகளால் அதிரடியாக அடித்ததாக தீக்சனா கூறியுள்ளார். இருப்பினும் அதைத் தடுத்து வெற்றிகரமாக பந்து வீசும் யுக்தியை தோனி தமக்கு கற்றுக் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “எம்எஸ் தோனியிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுள்ளேன். குறிப்பாக பேட்ஸ்மேன்கள் எனக்கு எதிராக ஸ்வீப் ஷாட்டுகளை அடிக்கும் போது எப்படி பந்து வீச வேண்டும் என்று அவர் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார். என்னுடைய பவுலிங் ஆக்சன் காரணமாக இயற்கையாகவே நான் கொஞ்சம் வேகமாக வீசுவேன்”

இதையும் படிங்க: 6 போர்ஸ் 10 சிக்ஸ்.. நொறுக்கிய சிவம் சிங்.. மதுரையை வெளியேற்றிய திண்டுக்கல்.. அஸ்வின் தலைமையில் பிளே ஆஃப்

“அப்படி இருந்தும் பவுலர்கள் தொடர்ந்து பவுண்டரிகள் அடித்தனர். அப்போது தோனி என்னை கொஞ்சம் ஃபுல்லராக வீச சொன்னார். அது என்னுடைய யார்க்கரை முன்னேற்றுவதற்கும் உதவியது. அதே போல டெத் ஓவர்களில் பந்து வீசுவதற்கும் என்னுடைய தன்னம்பிக்கையை அதிகரித்தது. தோனி எப்போதும் திட்டத்தை வைத்திருப்பார். ஆனால் முதலில் அவர் பவுலர்களின் திட்டத்தை தான் பின்பற்றுவார். அது வேலையாகவில்லை என்றால் தான் தோனி உங்களை வழிநடத்துவார்” என்று கூறினார்.

Advertisement