இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2024-ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்தார். 2024 டி20 உலக கோப்பை தொடரை கேப்டனாக வென்று கொடுத்த ரோகித் சர்மா அந்த தொடரின் இறுதிப்போட்டியுடன் தான் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்திய அணிக்காக 159 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4231 ரன்கள் அடித்து அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராகவும் இருக்கிறார்.
ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளிய ஆஸ்திரிய வீரர் :
டி20 போட்டிகளை பொருத்தவரை இந்திய அணிக்காக 159 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 205 சிக்ஸர்களுடன் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த வீரராகவும் முதலிடத்தில் இருந்தார். இவ்வேளையில் அவரது இந்த மாபெரும் சாதனையை ஆஸ்திரிய வீரர் கரன்பீர் சிங் என்பவர் தற்போது முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
இதன் காரணமாக சிக்ஸர் கிங்கான ரோகித் சர்மாவின் இந்த பெருமைக்குரிய பட்டம் தற்போது கரன்பீர் சிங்குக்கு சென்றுள்ளது. டி20 போட்டிகளை பொருத்தவரை 60 ஆட்டங்களில் விளையாடியுள்ள கரன்பீர் சிங் 207 சிக்ஸர்களை விளாசி ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
இவர்கள் இருவருக்கு அடுத்து யு.ஏ.இ வீரர் முகமது வாசிம் 196 சிக்சர்களுடன் மூன்றாவது இடத்திலும், சூரியகுமார் யாதவ் 179 சிக்சர்களுடன் நான்காவது இடத்திலும், ஜாஸ் பட்லர் 175 சிக்ஸர்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வைபவ் சூர்யவன்ஷியை சேக்கனும்னு இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க – புஜாரா கருத்து
சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மா தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலககோப்பை தொடருடன் அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவிப்பார் என்று தெரிகிறது.



