ஜாக் காலிஸை பின்னுக்கு தள்ளி மாபெரும் சாதனை நிகழ்த்திய ரோஹித் சர்மா – விவரம் இதோ

Rohit and Kallis
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து ஒருநாள் போட்டியில் மட்டுமே தற்போது விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்த ரோகித் சர்மா தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார்.

ஜாக் காலிஸை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா :

இந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்படும் படத்தில் அடுத்தடுத்த தொடர்களில் அவர் தேர்வு செய்யப்படுவார் என்பதனால் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடர் அவருக்கு மிக முக்கிய தொடராக மாறியுள்ளது. அந்த வகையில் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் நேற்று பங்கேற்று விளையாடியிருந்தார்.

- Advertisement -

அதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக வயதில் இந்திய அணிக்காக விளையாடிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். அதோடு நேற்றைய போட்டியில் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்துகையில் துவக்க வீரராகவும் அவர் களமிறங்கியிருந்தார். அப்படி களமிறங்கிய ரோகித் சர்மா 16 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 16 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்த போட்டியில் அவர் அடித்த 16 ரன்களின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஜாக் காலிசின் மாபெரும் சாதனை ஒன்றினையும் அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்றைய போட்டியில் அவர் அடித்த 16 ரன்களையும் சேர்த்து தற்போது ஒருநாள் போட்டிகளில் அவர் 275 ஆட்டங்களில் விளையாடி 11,593 ரன்களை குவித்து ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராக எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : என்னுடைய இந்த அற்புதமான சதத்திற்கு கம்பீர் கொண்ட அந்த அறிவுரைகள் தான் காரணம் – குர்பாஸ் பேட்டி

ஒரு நாள் போட்டிகளை பொருத்தவரை அதிக ரன்களை அடித்த வீரராக ஜாக் காலிஸ் 11,579 ரன்களுடன் தற்போது ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement