நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான கேன் வில்லியம்சன் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி இருந்தார். இந்த இங்கிலாந்து தொடரின் முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஜூன் 12-ம் தேதியான இன்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கேன் வில்லியம்சனுக்கு வாழ்த்து தெரிவித்த விராட் கோலி :
35 வயதே ஆன கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்காக கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அந்த அணிக்காக அதிக ரன்களை அடித்த வீரராகவும், அதிக சதங்களை குவித்த வீரராகவும் இருக்கிறார். அதோடு நியூசிலாந்து அணிக்காக மிகச் சிறப்பாக கேப்டன்சி செய்த அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் நியூசிலாந்து அணிக்கு பெற்றுத் தந்துள்ளார்.
அது தவிர்த்து ஒருநாள் மற்றும் டி20 உலககோப்பை தொடர்களில் அந்த அணியை இறுதிப்போட்டி வரை கொண்டு சென்றுள்ளார். இவ்வேளையில் இப்படி திடீரென கேன் வில்லியம்சன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்தது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருந்தாலும் அவரது இந்த மிகச் சிறப்பான கரியரை கருத்தில் கொண்டு பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கேன் வில்லியம்சனின் ஓய்வு குறித்து ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல வருட பயணத்தில் எதிரிகளாக துவங்கி இன்று என்னுடைய நல்ல நண்பராக மாறி இருக்கிறீர்கள். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் பேட்டிங் செய்வதை பார்த்ததும், உங்களுக்கு எதிராக விளையாடியதும் மிகவும் மகிழ்ச்சி. எல்லாவற்றையும் விட நமது நட்பையும், கிரிக்கெட்டையும் குறித்து நாம் பகிர்ந்தவற்றை மிகவும் மதிக்கிறேன்.
இதையும் படிங்க : 2027 வேர்ல்டுகப்ல கண்டிப்பா ரோஹித் மற்றும் விராட் ஆடனும்.. இதுதான் காரணம் – இர்பான் பதான் விளக்கம்
நாம் சந்திக்கும் போதும், பேசும்போதும் கிடைத்த நினைவுகளை எப்போதும் என்னுள் பொக்கிஷமாக வைத்திருப்பேன். உங்களுடைய பங்களிப்பை நீங்கள் கச்சிதமாக செய்து முடித்துள்ளீர்கள். தற்போது ஓய்வெடுக்க முழு தகுதியுடன் இருக்கிறீர்கள். உங்களுடைய புதிய பயணத்திற்கு வாழ்த்துக்கள் நண்பா என்று உருக்கமான பதிவை விராட் கோலி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



