6 போர்ஸ் 10 சிக்ஸ்.. நொறுக்கிய சிவம் சிங்.. மதுரையை வெளியேற்றிய திண்டுக்கல்.. அஸ்வின் தலைமையில் பிளே ஆஃப்

TNPL 24
- Advertisement -

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஜூலை 26ஆம் தேதி திண்டுக்கல்லில் உள்ள என்பிஆர் காலேஜ் மைதானத்தில் 24வது போட்டி நடைபெற்றது. அதில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மதுரை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு சிவம் சிங் அதிரடியாக விளையாடினர்.

அதே போல எதிர்ப்புறம் அதிரடி காட்ட முயற்சித்த மற்றொரு துவக்க வீரர் விமல் குமார் 23 (14) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த பாபா இந்திரஜித் தடுமாற்றமாக விளையாடி 29 (23) ரன்களில் அவுட்டானார். ஆனால் இந்தப் பக்கம் தொடர்ந்து மதுரை பவுலர்களை அடித்து நொறுக்கிய சிவம் சிங் அரை சதமடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

- Advertisement -

அசத்திய அஸ்வின் அணி:
இருப்பினும் எதிர்புறம் வந்த சரத்குமார் 19, கேப்டன் அஸ்வின் 3, பூபதி குமார் 1 ரன்னில் அவுட்டாகி சென்றார்கள். ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து மதுரை பவுலர்களை சூறையாடிய சிவம் சிங் கடைசி வரை அவுட்டாகாமல் 6 பவுண்டரி 10 சிக்சருடன் அபாரமான சதமடித்து 106* (57) ரன்களை 185.96 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தார். அவருடன் கடைசி நேரத்தில் 13* (8) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் திண்டுக்கல் 201/5 ரன்கள் எடுத்தது.

கொஞ்சம் சுமாராகவே பந்து வீசிய மதுரை சார்பில் அதிகபட்சமாக கார்த்திக் மணிகண்டன் 2 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 202 ரன்களை துரத்திய மதுரை அணிக்கு சுரேஷ் லோகேஷ்வர் அதிரடியாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் கேப்டன் ஹரி நிஷாந்த் 10 (8) ரன்னில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த ஜெகதீசன் கௌஷிக் 28 (22) ரன்னில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இருப்பினும் எதிர்ப்புறம் சுரேஷ் லோகேஸ்வரன் அரை சதமடித்து வெற்றிக்கு போராடினார். ஆனால் அவரை ரவிச்சந்திரன் அஸ்வின் 55 (37) ரன்களில் முக்கிய நேரத்தில் போல்ட்டாக்கினார். அதே போல மிடில் ஆர்டரில் தடுமாறிய சத்துருவேத் 18 (12) ரன்னில் வருண் சக்கரவர்த்தி சுழலில் போல்டானார். அடுத்ததாக வந்த சசி தேவ் 14, அக்ரம் கான் 1, மிதுன் 1 ரன்களில் அதிரடியாக விளையாட முயற்சித்து அவுட்டானார்கள்.

இறுதியில் சரவணன் அதிரடியாக 22* (13), முருகன் அஸ்வின் 10* (8) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் மதுரை 171/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திண்டுக்கல் சார்பில் அதிகபட்சமாக சந்திப் வாரியர் மற்றும் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையும் படிங்க: இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டது குறித்து பேசிய முன்னாள் பயிற்சியாளர் – ரவி சாஸ்திரி

இதையும் சேர்த்து 6 போட்டிகளில் 4வது வெற்றியை பதிவு செய்த திண்டுக்கல் அஸ்வின் தலைமையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. மறுபுறம் 6 போட்டிகளில் நான்காவது தோல்வியை பதிவு செய்த மதுரை லீக் சுற்றுடன் நாக் அவுட்டாகி பரிதாபமாக வெளியேறியது.

Advertisement