டிஎன்பிஎல்: 4, 6, 6, 6, 6, 6.. சேப்பாக்கை வீட்டுக்கு அனுப்பிய விமல் குமார் மாஸ் சாதனை.. ஃபைனல் சென்ற திண்டுக்கல்

TNPL DGD
- Advertisement -

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2025 சீசன் இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. அதில் ஜூலை நான்காம் தேதி திண்டுக்கல்லில் இருக்கும் என்பிஆர் காலேஜ் மைதானத்தில் குவாலிபயர் 2 போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் எலிமினேட்டரில் வென்ற நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் குவாலிஃபயர் 1இல் தோல்வியை சந்தித்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிகள் மோதின.

அதில் டாஸ் வென்ற திண்டுக்கல் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய சேப்பாக்கம் அணிக்கு துவக்க வீரர்கள் ஆசிக் 8, மோஹித் ஹரிஹரன் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் அபாரஜித் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள்.

- Advertisement -

திண்டுக்கல் அசத்தல்:

3வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சேப்பாக்கத்தை தூக்கி நிறுத்திய அந்த ஜோடியில் இருவருமே அரை சதத்தை அடித்தனர். அதில் பாபா அபாரஜித் 67 (44) ரன்னில் அவுட்டானதை தொடர்ந்து வந்த விஜய் சங்கர் கோல்டன் டக் அவுட்டானார். அடுத்த சில ஓவரில் மறுபுறம் அபாரமாக விளையாடிய ஜெகதீசன் 4 பவுண்டரி 6 சிக்ஸருடன் 81 (41) ரன்னில் கேப்டன் அஸ்வின் சுழலில் போல்ட்டானார்.

அடுத்து வந்த வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்காததால் 20 ஓவரில் சேப்பாக்கம் 178/7 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் அணிக்கு அதிகபட்சமாக சசிதரன் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய திண்டுக்கல் அணிக்கு அதிரடியாக பேட்டிங் செய்த சிவம் சிங் 27 (17) ரன்னில் விக்கெட்டை இழந்தார். மறுபுறம் தடுமாறிய கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 21 (20) ரன்னில் அவுட்டானார்.

- Advertisement -

ஒரே ஓவரில் மாஸ் சாதனை:

அடுத்து வந்த மான் ஃபாப்னா 2 ரன்னில் அவுட்டானாலும் விமல் குமார் அதிரடியாக விளையாடத் துவங்கினார். மறுபுறம் தம்முடைய பங்கிற்கு அதிரடி காட்டிய பாபா இந்திரஜித் முக்கியமான 42 (31) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். ஆனால் ரோகித் சுதர் வீசிய 17 ஓவரில் விமல் குமார் முதல் பந்தில் பவுண்டரி அடித்தார்.

அடுத்த 5 பந்துகளில் 6, 6, 6, 6, 6 என தொடர்ந்து 5 சிக்சர்களைப் பறக்க விட்ட அவர் ஒரே ஓவரில் 34 ரன்கள் தெறிக்க விட்டு போட்டியை தலைகீழாக மாற்றி சேப்பாக் தோல்வியை உறுதி செய்தார். இதன் வாயிலாக டிஎன்பிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற மாஸ் சாதனையை படைத்த விமல் குமார் மொத்தம் 5 பவுண்டரி 5 சிக்சருடன் 65 (30) ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் ஹண்ணி சைனி 12, தினேஷ் 5*, கார்த்திக் சரண் 4* ரன்கள் எடுத்ததால் 18.4 ஓவரிலேயே 182/6 ரன்களை எடுத்த திண்டுக்கல் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதையும் படிங்க: 387/5 டூ 407க்கு ஆல் அவுட்.. மாஸ் காட்டிய சிராஜ், தீப்.. கம்பேக் கொடுத்த இந்தியா.. இங்கிலாந்து பரிதாப சாதனை

அதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் திருப்பூரை எதிர்கொள்ள நடப்புச் சாம்பியன் திண்டுக்கல் தகுதி பெற்றது. மறுபுறம் பிரேம்குமார் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோற்ற சேப்பாக்கம் தொடரிலிருந்து வெளியேறியது.

Advertisement