6, 4.. வருண் மாஸ் ஃபினிஷிங்.. அஸ்வின் ஆல் ரவுண்டராக மிரட்டல்.. திண்டுக்கல் த்ரில் வெற்றி பெற்றது எப்படி?

TNPL 25
- Advertisement -

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2025 சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் ஜூன் 22ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு திருநெல்வேலியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் கம்பெனி மைதானத்தில் 19வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் நடப்புச் சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின.

அதில் டாஸ் வென்ற திண்டுக்கல் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய சேலம் 20 ஓவரில் போராடி 188-7 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நிதிஷ் ராஜகோபால் சிறப்பாக விளையாடி 74 (47) ரன்கள் குவித்தார். அவருடன் சன்னி சந்து 25 (14), ராஜேந்திரன் விவேக் 35 (20) ரன்களை எடுத்தார்கள். திண்டுக்கல் அணிக்கு கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிகபட்சமாக 4 ஓவரில் 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

ஆல் ரவுண்டராக அஸ்வின்:

அடுத்ததாக விளையாடிய திண்டுக்கல் அணிக்கு 4 ஓவரிலேயே 57 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டிய கேப்டன் அஸ்வின் 5 பௌண்டரி 2 சிக்ருடன் 36 (14) ரன்கள் குவித்து அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த பாபா இந்திரஜித் 4, மான் ஃபாப்னா 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அடுத்த சில ஓவரில் மறுபுறம் சிறப்பாக விளையாடிய சிவம் சிங்கும் 34 (24) ரன்னில் அவுட்டானார்.

மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய ஜெயந்த் 25 (15) ரன்களில் பொய்யாமொழி வேகத்தில் அவுட்டானார். அதே போல விமல் குமாரும் அதிரடியாக விளையாடி 24 (15) ரன்னில் முகமது வேகத்தில் பெவிலியன் திரும்பினார். மறுபுறம் நங்கூரமாக விளையாடி வந்த ஹன்னி சைனி 35 (28) ரன்னில் 19வது ஓவரில் அவுட்டானதால் திண்டுக்கல் வெற்றி கேள்விக்குறியானது.

- Advertisement -

வருண் மாஸ் ஃபினிசிங்:

இறுதியில் பொய்யாமொழி வீசிய கடைசி ஓவரில் திண்டுக்கல் வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது முதல் பந்தில் ரன் கொடுக்காத பொய்யாமொழி 2வது பந்தில் கார்த்திக் சரணை 12 ரன்னில் அவுட்டாக்கியதால் சேலம் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்து வந்த சந்திரசேகர் சிங்கிள் எடுத்த நிலையில் 4வது பந்தில் வருண் சக்கரவர்த்தி டபுள் ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க:வெறும் 34 மேட்ச்லேயே கபில் தேவ் சாதனையை சமன் செய்த பும்ரா.. இந்தியாவின் வெளிநாட்டு ஹீரோவாக சாதனை

ஆனால் 5வது பந்தை பொய்யாமொழி நோ-பாலாக வீசினார். அதைப் பயன்படுத்திய வருண் சக்கரவர்த்தி ஃப்ரீ ஹிட்டில் அபார சிக்ஸர் அடித்து கடைசி பந்தில் பௌண்டரி அடித்து மாஸ் ஃபினிசிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் 192/8 ரன்களை எடுத்த திண்டுக்கல் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியைப் பெற்றது. வருண் 13* (5), சந்திரசேகர் 1* (1) ரன்கள் எடுத்தனர். ஆனால் 3வது வெற்றியைப் பெற்ற அந்த அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் முகமது, பொய்யாமொழி அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் எடுத்தும் சேலம் 3வது தோல்வியை சந்தித்தது.

Advertisement