ஜெயவர்தனேவை முந்தி தோனி, சச்சின், கெயில் ஆகியோரின் சாதனைகளை உடைத்த கிங் கோலி.. 2 புதிய உலக சாதனை

Virat Kohli records
- Advertisement -

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 19ஆம் தேதி புனேவில் நடைபெற்ற லீக் போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 4வது வெற்றியை பதிவு செய்து செமி ஃபைனல் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவர்களில் 256/7 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 66 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா, முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள். அதை தொடர்ந்து 257 ரன்களை துரத்திய இந்தியாவிற்கு கேப்டன் ரோகித் சர்மா 48, சுப்மன் கில் 53, ஸ்ரேயாஸ் ஐயர் 19, விராட் கோலி 103*, கே.எல் ராகுல் 34* ரன்கள் எடுத்து 41.3 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

விராட் கோலியின் சாதனை:
அதனால் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெஹதி ஹசன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. இந்த வெற்றிக்கு 103* ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் தட்டி சென்றார். மேலும் இப்போட்டியில் அடித்த ரன்களையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 4வது வீரர் என்ற ஜெயவர்த்தனே சாதனையை உடைத்த விராட் கோலி புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 34357
2. குமார் சங்ககாரா : 28016
3. ரிக்கி பாண்டிங் : 27483
4. விராட் கோலி : 26026*
5. மகிளா ஜெயவர்த்தனே : 25957

அதை 567 இன்னிங்சிலேயே எடுத்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 26,000 ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் (இன்னிங்ஸ்):
1. விராட் கோலி : 567
2. சச்சின் டெண்டுல்கர் : 600
3. ரிக்கி பாண்டிங் : 624
4. குமார் சங்ககாரா : 625

- Advertisement -

அது போக 50 ஓவர் உலகக் கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய அனைத்து விதமான வெள்ளைப்பந்து ஐசிசி தொடர்களில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ்த கெயில் சாதனையை உடைத்துள்ள விராட் கோலி மற்றுமொரு புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 2959*
2. கிறிஸ் கெயில் : 2942
3. குமார் சங்ககாரா : 2876
4. மஹிலா ஜெயவர்த்தனே : 2858
5. சச்சின் டெண்டுல்கர் : 2719
6. ரோகித் சர்மா : 2687

இதையும் படிங்க: விராட் கோலிக்கு சாதகமா நடந்து கொண்டாரா அம்பயர்.. வங்கதேச ரசிகர்கள் கொதிப்பு.. நடந்தது என்ன?

மேலும் ஐசிசி தொடர்களில் அதிக வெற்றி பெற்ற போட்டிகளில் இடம் பிடித்த இந்திய வீரர் என்ற தோனியின் சாதனையும் தகர்த்த அவர் புதிய வரலாறு படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 53*
2. எம்எஸ் தோனி : 52
3. ரோஹித் சர்மா : 50
4. யுவராஜ் சிங் : 47*
5. சச்சின் டெண்டுல்கர் : 35

Advertisement