8 ஓவர்ஸ்.. அதை மட்டும் குழப்பாம செஞ்சுருந்தேன்னா இந்தியா 2023 உ.கோ ஜெயிச்சுருக்கும்.. ராகுல் வருத்தம்

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்திய ரசிகர்களுக்கு காலத்தால் மறக்க முடியாத சோகத்தை கொடுத்து விட்டு சென்றது என்றே சொல்லலாம். ஏனெனில் அத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய வரலாற்றிலேயே முதல் முறையாக வலுவான நியூசிலாந்தை செமி ஃபைனலில் தோற்கடித்து தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்று தோல்வியை சந்திக்காமல் எதிரணிகளை பந்தாடி வந்தது.

அதனால் 2011 போல சொந்த மண்ணில் இந்தியா கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெறும் 240 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பிய இந்தியா தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. அதனால் 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஒரு ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா சொந்த மண்ணில் அவமானத் தோல்வியை பதிவு செய்தது.

- Advertisement -

ராகுல் வருத்தம்:
முன்னதாக அந்தப் போட்டியில் ரோகித் சர்மா அதிரடியான துவக்கத்தை கொடுத்து அவுட்டான பின் இந்தியா 81/3 என்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருந்த போது கேஎல் ராகுல் களமிறங்கினார். அப்போது நிதானமாக விளையாடி 66 (107) ரன்கள் எடுத்து நன்கு செட்டிலான அவர் அதிரடியாக விளையாட வேண்டிய நேரத்தில் மிட்சேல் ஸ்டார்க்கிற்கு எதிராக 42வது ஓவரில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இந்நிலையில் அன்றைய நாளில் மேற்கொண்டு 8 ஓவர்கள் விளையாடி 30 – 40 ரன்கள் எக்ஸ்ட்ரா எடுத்திருந்தால் இந்நேரம் இந்தியா உலகக் கோப்பையை வென்றிருக்கும் என்று கேஎல் ராகுல் கூறியுள்ளார். உங்களுக்கு டைம் மெஷின் கிடைத்து ஒரு தவறை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பை கிடைத்தால் அது எதுவாக இருக்கும் என்று அவரிடம் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் கேட்டார்.

- Advertisement -

அதற்கு கேஎல் ராகுல் 2023 உலகக் கோப்பை பற்றி வருத்தத்துடன் பதிலளித்தது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஹமதாபாத் நகரில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பை ஃபைனல் தான் என்னுடைய நினைவுக்கு முதலாவதாக வரும். அந்த சமயத்தில் நான் மிட்சேல் ஸ்டார்க்கை அடிக்கலாமா வேண்டாமா என்பதில் சிக்கி விட்டேன். மிகவும் கடினமான கோணத்தில் இருந்து வீசிய அவருடைய பந்து ரிவர்ஸ் ஆனதால் அதை அட்டாக் செய்வது கடினமாக இருந்தது”

இதையும் படிங்க: ரிஷப் பண்ட் தொட்டதெல்லாம் தங்கமாக மாறியது.. அதுலயும் அவர் பண்ண அந்த விஷயம் நம்பவே முடியல – கில்க்ரிஸ்ட் பாராட்டு

“எனவே அவரை அடிக்கலாமா வேண்டாமா என்ற குழப்பம் எனக்கு ஏற்பட்டது. கடைசியில் முக்கிய நேரத்தில் நான் எட்ஜ் கொடுத்து அவுட்டானேன். ஒருவேளை அப்போட்டியில் மீதமிருந்த கடைசிக்கட்ட ஓவர்களில் நான் தொடர்ந்து பேட்டிங் செய்து இன்னும் 30 – 40 ரன்கள் எக்ஸ்ட்ராவாக எடுத்திருந்தால் உலகக் கோப்பை நம்முடைய கையில் இ

Advertisement