ரிஷப் பண்ட் தொட்டதெல்லாம் தங்கமாக மாறியது.. அதுலயும் அவர் பண்ண அந்த விஷயம் நம்பவே முடியல – கில்க்ரிஸ்ட் பாராட்டு

Gilchrist
- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்த நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் போட்டியில் விளையாடிய ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் வைத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று அஹமதாபாத் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களை கூட பூர்த்தி செய்ய முடியாமல் 17.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்கள் மட்டுமே குவித்தது. டெல்லி அணி சார்பாக முகேஷ்குமார் மூன்று விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மற்றும் ஸ்டப்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 90 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 8.5 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 92 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்றைய இந்த போட்டியின் போது களத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு சாலை விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட் களத்திற்கு திரும்பியுள்ள ரிஷப் பண்டின் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங், கேப்டன்சி என அனைத்துமே திருப்தி அளிக்கும் விதமாக இருப்பதால் ரசிகர்கள் அவரது இந்த செயல்பாட்டை பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியில் ரிஷப் பண்ட் தொட்டதெல்லாம் தங்கமாக மாறியது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஆடம் கில்க்ரிஸ்ட் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : பந்துவீச்சாளர் ரவுண்ட் தி ஸ்டம்பில் இருந்து பேட்ஸ்மேனுக்கு பந்தினை வீசுகிறார். அந்த கோணத்தில் இருந்து பந்து ரிஷப் பண்ட்டிற்கு வெளியே செல்லும். ஆனால் டேவிட் மில்லரின் பேட்டில் பட்ட பந்து எட்ஜ் ஆகி அவரது இடதுபுறம் சென்றது.

இதையும் படிங்க : 36 வயதான இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரை சி.எஸ்.கே அணி பாதியில் ஒப்பந்தம் செய்ய – என்ன காரணம் (விவரம் இதோ)

அப்போது ரிஷப் பண்ட் சரியாக தனது வலதுபுறத்திலிருந்து இடது புறத்திற்கு திரும்பி மிகவும் அற்புதமான கேட்சை எடுத்தார். அவரது இந்த கேட்ச் நம்ப முடியாத வகையில் இருந்தது. அதோடு பேட்டிங்கிலும் அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. நேற்று ஒரு கேப்டனாகவும் அவர் அற்புதமாக பவுலர்களை ரொட்டேட் செய்தார். நேற்று அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறியது என ஆடம் கில்க்ரிஸ்ட் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement