ராகுல் சாஹரை வைத்து தோனிக்கே ஸ்கெட்ச் போட்டு அசத்திய சாம் கரண் – டர்னிங் பாயிண்டான சூப்பர் கேப்டன்சி

Rahul-Chahar
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முடிந்த நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியானது ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியின் போது 19-ஆவது ஓவரை தோனிக்கு எதிராக சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் வீசியது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய சிஎஸ்கே அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழந்து 162 ரன்கள் குவித்தது. பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 163 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி பவர்பிளேவில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 55 ரன்கள் குவித்து இருந்தாலும் 7 முதல் 13 ஓவர்கள் வரை 30 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் கடைசியாக 7 ஓவர்களில் 77 ரன்களை சேர்த்தாலும் வெற்றிக்கு போதுமான ஸ்கோராக அது அமையவில்லை. அதிலும் குறிப்பாக பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான ஹர்ப்ரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி சென்னை அணியை அழுத்தத்திற்குள் கொண்டு வந்தனர்.

குறிப்பாக மிடில் ஓவர்களில் ஹர்ப்ரீத் பிரார் நான்கு ஓவர்களை முழுவதுமாக வீச ராகுல் சாஹர் மட்டும் 3 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தார். இதன் காரணமாக இறுதிக்கட்டத்தில் அவருக்கு மீதமுள்ள ஒரு ஓவர் வழங்கப்படாது என்றே பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் அந்த நேரத்தில் புத்திசாலித்தனமாக ஒரு முடிவினை பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் எடுத்தார்.

- Advertisement -

அதாவது ராகுல் சாகர் மீதம் வைத்திருந்த அந்த ஒரு ஓவரை தைரியமாக 19-வது ஓவராக இருந்தாலும் சரி என்று நினைத்து தோனிக்கு எதிராக வீச வழங்கினார். ஏனெனில் தோனி எப்போதுமே லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக சற்று தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். எனவே 19-வது ஓவரை ராகுல் சாகரிடம் சாம் கரண் வழங்கினார்.

இதையும் படிங்க : 19வது ஓவரில் வெறும் 3 ரன்ஸ்.. தோனியை அடக்கிய என்னோட திட்டம் இது தான்.. ராகுல் சஹர் பேட்டி

அதற்கு கைமேல் பலனாக அந்த ஓவரின் முதல் 2 பந்துகளை டாட் பாலாக வீசிய ராகுல் சாஹர் மூன்றாவது பந்தில் மெயின் அலியின் விக்கெட்டை வீழ்த்தியதோடு சேர்த்து வெறும் மூன்று ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்ததால் சென்னை அணியால் பெரிய ரன் குவிப்பை நோக்கி செல்ல முடியாமல் போனது. அந்த ஒரு ஓவர்தான் பஞ்சாப் அணியின் வெற்றிக்கும் டர்னிங் பாயிண்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement