36 வயதான இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரை சி.எஸ்.கே அணி பாதியில் ஒப்பந்தம் செய்ய – என்ன காரணம் (விவரம் இதோ)

Richard
- Advertisement -

கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியானது இதுவரை 6 போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றி மற்றும் இரண்டு தோல்விகள் என 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியல் மூன்றாவது இடத்தினை பிடித்துள்ளது. இவ்வேளையில் இந்து தொடரின் ஆரம்பத்தில் சென்னை அணியுடன் சற்று தாமதமாக இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டேவான் கான்வே இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது விளையாடி இருந்த கான்வே இடதுகை கட்டை விரலில் காயம் அடைந்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிட்ட அவர் ஐபிஎல் தொடரின் பாதியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் அவரது காயம் இன்னும் குணமடையாத வேளையில் டி20 உலக கோப்பை தொடருக்காக அவர் தயாராக வேண்டும் என்பதினால் நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அவருக்கு ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டாம் என்று அறிவுரை வழங்கியுள்ளது. இதன் காரணமாக தற்போது ஐபிஎல் தொடரிலிருந்து டேவான் கான்வே விலகுவதாக அறிவித்துள்ளார்.

அதே வேளையில் அவருக்கு பதிலாக சிஎஸ்கே அணி 36 வயதான இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ரிச்சர்டு க்ளீசனை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது. இப்படி மாற்றுவீரராக இவர் தேர்வு செய்யப்பட என்ன காரணம்? என்பது குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் டி20 உலக கோப்பை தொடருக்காக தயாராகும் வகையில் மார்ச் மாதம் ஆரம்பத்திலேயே சென்னை அணியில் இருந்து வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் வெளியேற உள்ளார். எனவே அவருக்கு பதிலாக அந்த இடத்தை நிரப்பக்கூடிய பவுலரை தேடி வந்த சி.எஸ்.கே நிர்வாகம் இப்படி க்ளீசனை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது.

இதையும் படிங்க : “இது லிஸ்ட்லயே இல்லையே” குஜராத் அணிக்கெதிரான போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யம் – ரிஷப் பண்ட் கலக்கல்

36 வயதான வேகப்பந்து வீச்சாளரான க்ளீசன் இதுவரை 90 டி20 போட்டிகளில் விளையாடி 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதோடு சர்வதேச டி20 போட்டிகளிலும் 6 போட்டிகளில் அவர் பங்கேற்று உள்ளார். அதிலும் குறிப்பாக இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியின் போது அவர் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், விராட் கோலி என மூன்று முக்கிய வீரர்களின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement