“இது லிஸ்ட்லயே இல்லையே” குஜராத் அணிக்கெதிரான போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யம் – ரிஷப் பண்ட் கலக்கல்

Rishabh-Pant
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது சொந்த மண்ணில் குஜராத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் அணியானது டெல்லி அணியின் அசத்தலான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவர்களை கூட முழுவதுமாக பூர்த்தி செய்யாமல் 17.3 ஓவர்களில் 89 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக 90 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 8.5 ஓவர்களிலேயே நான்கு விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் குஜராத் அணியை 89 ரன்களில் சுருட்டியதன் மூலம் எதிரணியை குறைந்த ரன்களுக்கு சுருட்டிய அணியாக டெல்லி அணி சாதனை நிகழ்த்தியுள்ளது. அதோடு 90 ரன்கள் இலக்கினை 8.5 ஓவர்களிலேயே விரட்டி 67 பந்துகளை மீதம் வைத்து மிகப்பெரிய வெற்றியையும் டெல்லி அணி ருசித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருதை பவுலரோ, பேட்ஸ்மேனோ பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கேப்டன் ரிஷப் பண்டிற்கு வழங்கப்பட்டது. அதற்கு காரணம் யாதெனில் : குஜராத் அணியின் இந்த சரிவிற்கு மிக முக்கியமான கேப்டன் ரிஷப் பண்ட் திகழ்ந்தார் என்றால் மிகையல்ல. ஏனெனில் சரியான நேரத்தில் சரியான பந்துவீச்சாளர்களை கொண்டு வந்து ஆட்டத்தை திருப்பியது, இரண்டு ஸ்டம்பிங் மற்றும் இரண்டு கேட்ச்கள் என விக்கெட் கீப்பிங்கிலும் அசத்தினார்.

இதையும் படிங்க : கில் – ஜெய்ஸ்வால் ஆகியோரில் யார் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும்.. ஜஹீர், மோர்கன் தேர்வு

அதோடு மட்டுமின்றி பேட்டிங்கிலும் 11 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என ஆட்டம் இழக்காமல் 16 ரன்கள் அடித்து வெற்றிக்கு அழைத்துச் சென்றது என அசத்தினார். இந்த போட்டியில் அவரது கேப்டன்சிக்காக ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்ட ஒரு வினோதமான நிகழ்வும் நேற்றைய போட்டியின் போது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement