இந்தியாவில் அப்படி நடந்ததை தாங்க முடியல்.. 2023 உ.கோ பாகிஸ்தானின் தோல்விக்கும் அதான் காரணம்.. மிக்கி ஆர்த்தர்

Mickey Arthur 2
- Advertisement -

இந்தியாவில் கடந்த வருடம் கோலாகலமாக நடைபெற்று முடிந்த 2023 ஐசிசி உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவை தவிர்த்து எஞ்சிய அணிகளுக்கு சோகமாகவே நிறைவு பெற்றது. குறிப்பாக 1992 போல கோப்பையை வென்று உங்களை பல வகையிலும் புறக்கணிக்கும் இந்திய மண்ணில் புதிய சரித்திரம் படைக்கும் முனைப்புடன் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அத்தொடரில் களமிறங்கியது.

ஆனால் அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய அந்த அணி வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக இந்தியாவிடம் உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்தது. அதை விட சென்னையில் கத்துக்குட்டியாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு போட்டியில் அவமான தோல்வியை பதிவு செய்த பாகிஸ்தான் கடைசி வரை செமி ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

- Advertisement -

தோல்விக்கு காரணம்:
அந்த தோல்விகளுக்கு பொறுப்பேற்று பாபர் அசாம் தம்முடைய அனைத்து விதமான கேப்டன்ஷிப் பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். அதே போல உலகக் கோப்பையை முடித்துக் கொண்டு குடும்பத்தை பார்க்க நாடு சென்ற அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தரை அப்படியே சென்று விடுங்கள் என்று கழற்றி விட்டுள்ள பாகிஸ்தான் வாரியம் தற்போது முகமது ஹபீஸை புதிய இயக்குனராக நியமித்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் இயக்குனராக இருந்ததில் 2023 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு சந்தித்த தோல்வி தமக்கு மோசமானதாகவும் மறக்க முடியாததாகவும் இருந்ததாக மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். மேலும் அப்போட்டி நடைபெற்ற அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் யாருமே பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுக்காதது தங்களின் தோல்விக்கு காரணம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி விஸ்டனில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பாகிஸ்தானுக்கு அப்போட்டியில் எந்த ஆதரவும் கிடைக்காதது மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில் மற்ற மைதானங்களிலும் ஹோட்டல்களிலும் பாகிஸ்தான் அணிக்கு இந்தியாவில் நிறைய ஆதரவு கிடைத்தது. ஆனால் அகமதாபாத்தில் மட்டும் ஒரு விரோதமான சூழல் இருந்தது. இருப்பினும் அதை நாங்கள் எதிர்பார்த்தோம். அதைப் பற்றி எந்த புகாரும் செய்யாத எங்களுடைய வீரர்களை இந்த நேரத்தில் பாராட்ட வேண்டும். அதே சமயம் ட்விட்டரில் எங்களுக்கு ஏராளமான ரசிகர்களின் ஆதரவு இருந்தது” என்று கூறினார்.

இதையும் படிங்க: இதுல கூடவா இடமில்ல.. அப்படி ரோஹித் மேல என்ன வன்மம்? மும்பையை விளாசும் ரசிகர்கள்

முன்னதாக “சக்தே இந்தியா” உத்வேக பாடலைப் போல் “தில்தில் பாகிஸ்தான்” உத்வேக பாடலை வேண்டுமென்றே அகமதாபாத் மைதான நிர்வாகம் ஒலிபரப்பாததே தங்களுடைய தோல்விக்கு காரணம் என்று மிக்கி ஆர்தர் அப்போதே விமர்சித்தார். அதனால் இது ஐசிசி நடத்தும் தொடருக்கு பதிலாக பிசிசிஐ நடத்தும் தொடரை போல் இருப்பதாக தெரிவித்திருந்த அவர் இவை அனைத்திற்கும் ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்திருந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் அணியை விட்டே வெளியேறியுள்ளார்.

Advertisement