விராட் கோலிக்கு சாதகமா நடந்து கொண்டாரா அம்பயர்.. வங்கதேச ரசிகர்கள் கொதிப்பு.. நடந்தது என்ன?

Richard Ketteleborough
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 19ஆம் தேதி புனேவில் நடைபெற்ற போட்டியில் வங்கதேசத்தை எளிதாக 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தொடர்ந்து தங்களுடைய 4வது வெற்றியை பதிவு செய்து வெற்றி நடை போட்டு வருகிறது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 257 ரன்களை மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 66 ரன்கள் எடுக்க இந்தியா சார்பாக பும்ரா, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். அதை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 48, கில் 53 ரன்கள் அடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதனால் அடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 19 ரன்களில் அவுட்டானாலும் விராட் கோலி சிறப்பான சதமடித்து 103* ரன்களும் ராகுல் 34* ரன்களும் அடித்து 41.3 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

சாதகமாக அம்பயர்:
அதனால் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெஹதி ஹசன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. முன்னதாக இந்த போட்டியில் விராட் கோலி 85 ரன்களில் இருந்த போது இந்தியா வெற்றி பெற 15 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதனால் 34 ரன்களில் இருந்த ராகுல் மேற்கொண்டு சிங்கிள் எடுக்காமல் தொடர்ந்து ஸ்ட்ரைக்கை அவருக்கே கொடுத்து சதமடிக்க உதவினார்.

அதை பயன்படுத்திய விராட் கோலி சதத்தை நெருங்கிய நிலையில் 42வது ஓவரை வீசிய நசும் அஹ்மத் 2வது பந்தை லெக் சைட் திசையில் வீசினார். குறிப்பாக சதத்தை தடுப்பதற்காகவே அவர் வேண்டுமென்றே ஒயிட் பந்தை வீசினார். ஆனால் அப்போது இந்தியா வெற்றி பெறுவதற்கு வெறும் 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் களத்தில் இருந்த நடுவர் ரிச்சர்ட் கெட்டல்போரக் ஒய்ட் கொடுக்காதது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது.

- Advertisement -

இருப்பினும் அந்த சமயத்தில் பந்து வருவதை முன்னதாகவே பார்த்த விராட் கோலி சற்று வேண்டுமென்றே ஒய்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒதுங்கி சென்றார். எனவே அதை அடிப்படையாக வைத்தே நடுவர் ஒய்ட் கொடுக்கவில்லை என்று இந்திய ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: 1 பந்தில் 14 ரன்கள்.. நியூஸிலாந்து வீரரை ஓரம்கட்டி வங்கதேச பவுலரை வெளுத்து வாங்கிய கிங் கோலி

ஆனால் அந்த சமயத்தில் விராட் கோலி சதமடிக்க வேண்டும் என்பதற்காக நடுவர் வேண்டுமென்றே ஒயிட் கொடுக்கவில்லை என்று வங்கதேச ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். அதற்கு அந்த நடுவர் தன்னுடைய வாய் மீது கைவைத்து லேசாக சிரித்துக்கொண்டே கொடுத்த கூலான ரியாக்சன் தான் ஆதாரம் என்றும் அவர்கள் சமூக வலைதளங்களில் இந்தியாவை வழக்கம் போல விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement