1 பந்தில் 14 ரன்கள்.. நியூஸிலாந்து வீரரை ஓரம்கட்டி வங்கதேச பவுலரை வெளுத்து வாங்கிய கிங் கோலி

Virat Kohli 14
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 19ஆம் தேதி புனேவில் நடைபெற்ற 17வது லீக் போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 4வது வெற்றியை பதிவு செய்தது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த போதிலும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவர்களில் 256/8 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 66, தன்சித் ஹசன் 51 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா, ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 257 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 48 ரன்களும், கில் 53 ரன்களும் அடித்து சிறப்பான துவக்கத்தை கொடுத்து ஆட்டமிழந்தனர்

- Advertisement -

1 பந்தில் 14:
அந்த நிலையில் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 19 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி கேஎல் ராகுல் உதவியுடன் சதமடித்து 103* (97) ரன்கள் விளாசினார். அவருடன் ராகுல் 34* ரன்கள் எடுத்ததால் 41.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்தியா தொடர்ந்து 4வது வெற்றியை பதிவு செய்தது.

அதனால் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெஹதி ஹாசன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை சந்தித்தது. முன்னதாக இப்போட்டியில் 13வது ஓவரை வீசிய ஹசன் மஹ்முத் 4வது பந்தில் ரோகித் சர்மா அவுட்டாக்கியதை தொடர்ந்து நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி களமிறங்கினார். அந்த நிலைமையில் வீசப்பட்ட 5வது பந்தை எதிர்கொண்ட விராட் கோலி 2 ரன்கள் எடுத்த நிலையில் வெள்ளைக்கோட்டுக்கு வெளியே காலை வைத்து வீசியதால் நடுவர் அதை நோபால் என்று அறிவித்தார்.

- Advertisement -

அதற்காக மீண்டும் வீசப்பட்ட பந்தில் விராட் கோலி மிகச் சிறப்பான பவுண்டரியை பறக்க விட்டார். ஆனால் மீண்டும் அந்த பவுலர் எல்லை கோட்டுக்கு வெளியே காலை வைத்து வீசியதை தொடர்ந்து நடுவர் 2வது முறையாக நோபால் கொடுத்து ப்ரீஹிட் வழங்கினார். அதைத் தொடர்ந்து மீண்டும் வீசப்பட்ட பந்தில் லாங் ஆன் திசையில் அட்டகாசமான சிக்சரை பிடித்த விராட் கோலி ஒரே பந்தில் 14 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க: விராட் கோலி சதத்துக்காக செல்ஃபிஷா ஆடுனாறா? நடந்தது தெரியாம பேசாதீங்க.. ராகுல் பேட்டி

அதாவது 2 நோபால்களுக்கு 2 எக்ஸ்ட்ரா ரன்கள் மற்றும் ஆரம்பத்திலேயே எடுத்த 2 ரன்களுடன் சேர்த்து 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் மொத்தம் 14 ரன்களை ஒரே பந்தில் அடித்த விராட் கோலி அந்த பவுலரை வெளுத்தார் என்றே சொல்லலாம். அத்துடன் இதே தொடரில் நெதர்லாந்துக்கு எதிராக பஸ் டீ லீடி வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் நியூசிலாந்து வீரர் மிட்சேல் சான்ட்னர் 13 ரன்கள் அடித்திருந்தார். ஆனால் இந்த போட்டியில் அவரை ஓரம் கட்டிய விராட் கோலி ஒரே பந்தில் 14 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு பெருமையை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement