விராட் கோலி சதத்துக்காக செல்ஃபிஷா ஆடுனாறா? நடந்தது தெரியாம பேசாதீங்க.. ராகுல் பேட்டி

KL rahul 2
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 19ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 4வது வெற்றியை பதிவு செய்தது. புனேவில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 257 ரன்களை மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக லெட்டர் தாஸ் 66 ரன்களும் டன்சித் ஹசன் 51 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அதை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 48, கில் 53 என ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி பெரிய ரன்கள் அடித்து மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ராகுல் பதிலடி:
அதை தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 19 ரன்களில் அவுட்டானாலும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மீண்டும் சேசிங்கில் தன்னுடைய கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் சதமடித்து 103* (97) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அவருக்கு கடைசி நேரத்தில் சிங்கிள்களை எடுக்காமல் சதமடிக்க உதவிய ராகுல் 34* ரன்கள் எடுத்ததால் 41.3 ஓவரிலேயே இந்தியா எளிதான வெற்றி பெற்றது..

அதனால் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெஹதி ஹசன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் 3வது தோல்வியை பதிவு செய்தது. முன்னதாக இப்போட்டியில் விராட் கோலி 85 ரன்களில் இருந்த போது இந்தியா வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 34* ரன்களில் இருந்த ராகுல் மேற்கொண்டு ஒரு சிங்கிள் கூட எடுக்காமல் தொடர்ந்து விராட் கோலி சதமடிப்பதற்காக கிடைத்த வாய்ப்புகளில் கூட ரன்கள் எடுக்காமல் ஸ்ட்ரைக்கை மாற்றி கொடுத்தார்.

- Advertisement -

அதை பயன்படுத்திய விராட் கோலி ஒரு கட்டத்தில் இந்தியாவுக்கு வெறும் 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் கைநழுவிய சதத்தை சிக்ஸர் அடித்து எட்டியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. ஆனாலும் வழக்கம் போல சிலர் விராட் கோலி சுயநலத்துடன் சதத்துக்காக விளையாடியதாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். அவர்களுக்கு போட்டியின் முடிவில் ராகுல் களத்தில் நடந்த பின்னணியை பகிர்ந்து பதிலடி கொடுத்தது பின்வருமாறு.

இதையும் படிங்க: ஹார்டிக் பாண்டியாவின் காயம் எப்படி இருக்கு? அடுத்த போட்டியில் ஆடுவாரா? – ரோஹித் சர்மா கொடுத்த விளக்கம்

“விராட் கோலி சதமடிப்பதற்காக நான் சிங்கிள் எடுக்கவில்லை. அப்போது நீங்கள் சிங்கிள் எடுக்காமல் போனால் அது நன்றாக இருக்காது. ஏனெனில் அனைவரும் நான் சொந்த சாதனைக்காக விளையாடுகிறேன் என நினைப்பார்கள் என்று விராட் கோலி என்னிடம் தெரிவித்தார். ஆனால் வெற்றி நமக்கு உறுதியாகிவிட்டதால் நீங்கள் சதமடியுங்கள் என்று நான் தான் அவரிடம் சொன்னேன். குறிப்பாக 30 ரன்கள் தேவைப்பட்ட போது அனைத்து பந்துகளையும் நான் தடுக்கிறேன் பெரிய ஷாட்டுகளை விளையாடுங்கள் என்று அவரிடம் சொன்னேன்” என கூறினார்.

Advertisement