ஹார்டிக் பாண்டியாவின் காயம் எப்படி இருக்கு? அடுத்த போட்டியில் ஆடுவாரா? – ரோஹித் சர்மா கொடுத்த விளக்கம்

Pandya-and-Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 17-ஆவது லீக் ஆட்டமானது புனே நகரில் அக்டோபர் 19-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியதோடு சேர்த்து இந்த உலகக் கோப்பை தொடருக்கான புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

அதோடு இந்த உலகக்கோப்பை தொடரை அசத்தலாக துவங்கியுள்ள இந்திய அணி அடுத்தடுத்த வெற்றிகளுக்கும் தயாராகி வருகிறது. மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் காயமடைந்துள்ளது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஏற்கனவே காயம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பந்து வீசாமல் இருந்து வந்த பாண்டியா தற்போது தான் முழுமையான உடற்தகுதி பெற்று சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.

அதிலும் குறிப்பாக இந்திய அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இறுதி நேரத்தில் அதிரடியாக பேட்டிங் செய்வதோடு சேர்த்து பந்து வீச்சிலும் அசத்தி வரும் அவர் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக பார்க்கப்படுகிறார். இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் ஓவரை வீசிய அவர் மூன்று பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் காயமடைந்து மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

- Advertisement -

அதன் பிறகு இந்த போட்டி முழுவதுமே பந்துவீசாத அவர் பேட்டிங்கும் செய்ய வரவில்லை. இந்நிலையில் ஹார்டிக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டால் நிச்சயம் அது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக மாறும் என்று அனைவரும் பதட்டம் அடைந்துள்ள வேளையில் போட்டி முடிந்து ஹார்டிக் பாண்டியாவின் காயம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : ஜடேஜாவிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சதம் அடித்து ஆட்டநாயகன் விருது வென்ற பின்னர் – விராட் கோலி நெகிழ்ச்சி

ஹர்திக் பாண்டியாவிற்கு தற்போது சிறிய அளவிலான தசைப் பிடிப்பே ஏற்பட்டுள்ளது. எனவே அதனைப் பற்றி கவலைப்பட ஒன்றும் பெரிய விடயங்கள் கிடையாது. நாளை காலை அவர் எவ்வாறு இருக்கிறார் என்பதை பார்க்கலாம். அதன் பிறகு என்னென்ன முடிவு எடுக்கப்படும் என்று தெரியும். தற்போதைக்கு அவருடைய பிட்னஸ் குறித்து எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement