ஜடேஜாவிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சதம் அடித்து ஆட்டநாயகன் விருது வென்ற பின்னர் – விராட் கோலி நெகிழ்ச்சி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இன்று அக்டோபர் 19-ஆம் தேதி புனே மைதானத்தில் நடைபெற்ற 17-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இந்த உலகக் கோப்பை தொடரில் தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்து தற்போது 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

அந்த வகையில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வங்கதேச அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் குவித்தது. பங்களாதேஷ் அணி சார்பாக துவக்க வீரர்கள் தன்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர். அவர்களை தவிர்த்து முகமதுல்லா 46 ரன்களையும், முஷ்பிகுர் ரஹீம் 38 ரன்களையும் அடித்தனர்.

- Advertisement -

பின்னர் 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 261 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக விராட் கோலி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 97 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 103 ரன்கள் குவித்து அசத்தியதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய விராட் கோலி கூறுகையில் : நான் ஜடேஜாவிடம் இருந்து ஆட்டநாயகன் விருதை பறித்ததற்கு முதலில் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த போட்டியில் நான் பெரிய பங்களிப்பை வழங்க வேண்டும் என்று நினைத்தேன். ஏற்கனவே உலகக்கோப்பை தொடர்களில் நான் பல்வேறு அரை சங்களை அடித்து இருந்தாலும் இந்த அதனை சதமாக மாற்ற வேண்டும் என்று நினைத்தேன்.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியின் இறுதி வரை நின்று சதம் அடித்ததோடு அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதில் மகிழ்ச்சி. இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே முதல் இரண்டு பந்துகள் எனக்கு ஃப்ரீ ஹிட்டாக கிடைத்தன. அதில் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் வந்த பிறகு சற்று நிதானமாக விளையாட வேண்டும் என்று நினைத்தேன். மேலும் இந்த மைதானத்தில் பேட்டிங்கிற்கு அதிக சாதகம் இருந்ததால் என்னுடைய திட்டங்களை நான் தெளிவாக வைத்துக் கொண்டேன். அதோடு பந்தை ஃபீல்டர்களின் இடைவெளியில் அடித்து விட்டு ரன்களை ஓட வேண்டும் என்றும் தேவையான போது பவுண்டரிகளை விளாச வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டேன்.

இதையும் படிங்க : இதுக்கு மேலேயும் நீங்க சத்தமா காத்த போறீங்க. வெற்றிக்கு பின்னர் ரசிகர்களை குஷி படுத்திய – கேப்டன் ரோஹித் சர்மா

இந்த போட்டியில் எனது ஆட்டம் சிறப்பாக இருந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வெற்றியை அப்படியே இனி வரும் போட்டிகளில் தொடர விரும்புகிறோம். இது ஒரு பெரிய தொடர் எனவே நிச்சயம் இந்த வெற்றியானது எங்களுக்கு அடுத்தடுத்த போட்டிகளில் ஒரு உத்வேகத்தை தரும் என்று நம்புகிறேன். சொந்த மண்ணில் இவ்வளவு ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என ஆட்டநாயகன் விராட் கோலி நெகிழ்ச்சியுடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement