இதுக்கு மேலேயும் நீங்க சத்தமா காத்த போறீங்க. வெற்றிக்கு பின்னர் ரசிகர்களை குஷி படுத்திய – கேப்டன் ரோஹித் சர்மா

Rohit
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி ஏற்கனவே ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என மூன்று அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிகளுடன் அபாரமாக இந்த உலகக் கோப்பை பயணத்தை துவங்கியுள்ளது. மேலும் இந்திய அணி இன்று அக்டோபர் 19-ஆம் தேதி நடைபெற்ற வங்கதேச அணிக்கெதிரான போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி இந்த தொடரில் நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

அந்த வகையில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடி அந்த அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை குவிக்க பின்னர் 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் : உண்மையிலேயே இந்த வெற்றி மிகவும் சிறப்பான ஒன்றாக இருந்தது. இது போன்ற ஒரு வெற்றியைத் தான் நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம். இந்த போட்டியில் நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக துவங்கவில்லை என்றாலும் மிடில் ஓவர்களிலும் பின் வரிசையிலும் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி பங்களாதேஷ் அணியை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதோடு நடைபெற்று வரும் இந்த தொடரில் எங்கள் அணியின் பீல்டிங்கும் மிகச் சிறப்பாக உள்ளது. பீல்டிங் மட்டுமே நமது அணியை எப்பொழுதும் கண்ட்ரோலில் வைத்திருக்கும் ஒன்றாக உள்ளது. இந்த போட்டியில் நமது அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினர். அதிலும் குறிப்பாக ஜடேஜா அற்புதமாக செயல்பட்டார்.

- Advertisement -

பந்துவீச்சில் மட்டும் இன்றி அவர் பீல்டிங்கிலும் நன்றாகவே செயல்பட்டார் இருந்தாலும் விராட் கோலி அடித்த சதம் அதனை கடந்து விட்டது. ஒரு அணியாக நாங்கள் இப்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். ஒவ்வொரு போட்டியிலும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு மெடலை வழங்குவது அவர்களை மேலும் ஊக்கப்படுத்தி சிறப்பாக செயல்பட வைக்கும் என்பதால் கொடுக்கப்படுகிறது.

இதையும் படிங்க: பெரிய உதவி செய்த ராகுல்.. இந்தியாவுக்கு த்ரில்லான சதமடித்து வங்கதேசத்தை வீழ்த்திய கிங் கோலி

இந்திய அணி விளையாடும் போட்டிகளை காண பெருமளவில் ரசிகர்கள் நேரில் வந்து எங்களை ஆதரிக்கின்றனர். எப்போதுமே அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்காமல் வெற்றி பெறவே விரும்புகிறோம். இனியும் இந்த சத்தம் எங்களது வெற்றிகளின் மூலம் அதிகரிக்கும் என வெற்றிக்கு பின்னர் ரசிகர்களை ரோகித் சர்மா தனது வார்த்தைகளால் குஷி படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement