பெரிய உதவி செய்த ராகுல்.. இந்தியாவுக்கு த்ரில்லான சதமடித்து வங்கதேசத்தை வீழ்த்திய கிங் கோலி

- Advertisement -

ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 19ஆம் தேதி புனே நகரில் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற 16வது லீக் போட்டியில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வங்கதேசம் எதிர்கொண்டது. அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி சிறப்பாக விளையாடிய 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த ஓப்பனிங் ஜோடியில் தன்சித் ஹசன் 51 ரன்களில் குல்தீப் யாதவ் சுழலில் சிக்கினார்.

அவரை தொடர்ந்து வந்த கேப்டன் சான்டோவை 8 ரன்களில் அவுட்டாக்கிய ஜடேஜா மறுபுறம் நிதானமாக விளையாடிய நட்சத்திர வீரர் லிட்டன் தாசையும் 66 ரன்களில் பெவிலியன் அனுப்பி வைத்தார். அந்த நிலையில் வந்த மெஹதி ஹசன் 3 ரன்களில் சிராஜ் வேகத்தில் ராகுலின் சிறப்பான கேட்ச்சால் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த ஹ்ரிடாய் 16 ரன்களில் தாகூர் வேகத்தில் நடையை கட்டினார். இறுதியில் அனுபவ வீரர்கள் முஸ்பிகர் ரஹீம் போராடி 38 மஹமதுல்லா 47 (36) ரன்கள் எடுத்ததால் 50 ஓவர்களில் வங்கதேசம் 256/8 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ், பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 257 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடி 88 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதில் கேப்டன் ரோகித் சர்மா 7 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக 48 (40) ரன்களில் அவுட்டானார்.

அவரைத் தொடர்ந்து வந்த விராட் விராட் கோலி சிறப்பாக விளையாடிய நிலையில் மறுபுறம் 53 (55) ரன்கள் எடுத்த கில்லை அவுட்டாக்கிய மெஹதி ஹசன் அடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயரையும் 19 ரன்களில் செய்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய விராட் கோலி அடுத்ததாக வந்த ராகுலுடன் ஜோடி சேர்ந்து இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார். நேரம் செல்ல செல்ல தம்முடைய ஸ்டைலில் 50 ரன்கள் கடந்த கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சதத்தை நெருங்கினார்.

- Advertisement -

அப்போது அதை தொடுவதற்காக எதிர்புறம் கேஎல் ராகுல் 34 ரன்களிலிருந்தே சிங்கிள் எடுக்காமல் மிகப்பெரிய உதவி செய்து வந்தார். அதை பயன்படுத்திய விராட் கோலி 92* ரன்களை எட்டிய போது இந்தியாவுக்கு 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் சதததை தொட முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. இருப்பினும் அதை தொடர்ந்து துரத்திய அவர் 42வது ஓவரின் 3வது பந்தில் சிக்சர் அடித்து தன்னுடைய 48வது ஒருநாள் சதத்தை விளாசி 6 பவுண்டரி 4 சிக்சருடன் 103* (97) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

இதையும் படிங்க: வங்கதேசத்தை வெளுத்து ஏபிடி, மோர்கன், ஷாகிப்பின் சாதனையை தூளாக்கிய ரோஹித் சர்மா.. 3 புதிய உலக சாதனை

அவருடன் ராகுல் 34* (34) ரன்கள் எடுத்ததால் 41.3 ஓவரிலேயே 261/3 ரன்கள் எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதன் காரணமாக 4 போட்டிகளில் தொடர்ந்து 4 வெற்றிகளை பதிவு செய்த இந்தியா அரையிறுதிக்கு செல்வதற்கான பிரகாசமாக்கியுள்ளது. மறுபுறம் மெஹதி ஹசன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் வங்கதேசம் தோல்வியை சந்தித்தது.

Advertisement