வங்கதேசத்தை வெளுத்து ஏபிடி, மோர்கன், ஷாகிப்பின் சாதனையை தூளாக்கிய ரோஹித் சர்மா.. 3 புதிய உலக சாதனை

Rohit Sharma Record 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 19ஆம் தேதி நடைபெற்ற 17வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மதியம் 2 மணிக்கு துணை நகரில் துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 50 ஓவர்களில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 256/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

குறிப்பாக அந்த அணிக்கு 94 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓப்பனிங் ஜோடியில் லிட்டன் தாஸ் 66 ரன்களும் 51 ரன்களும் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ஆனால் அதன் பின் வந்த கேப்டன் நஜ்மல் சான்டோ 8, மெகதி ஹசன் 3, ஹ்ரிடாய் 16 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ரோஹித்தின் உலக சாதனை:
ஆனாலும் லோயர் மிடில் ஆர்டரில் ரஹீம் 38, முகமதுல்லா 46 ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றிய நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 257 ரன்கள் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா வழக்கம் போல அதிரடியாக விளையாடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தார்.

குறிப்பாக பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 88 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்து 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் 48 (40) ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் சேசிங் செய்யும் போது அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாகிப் ஆல் ஹசன் சாதனையை தகர்த்த அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 754*
2. ஷாகிப் அல் ஹசன் : 743
3. அர்ஜுனா ரணதுங்கா : 727

- Advertisement -

அது போக இப்போ போட்டியில் 120 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் மிகச் சிறப்பாக விளையாடிய அவர் இதுவரை உலக கோப்பையில் 21 போட்டிகளில் 1243 ரன்களை 102.55 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். இதன் வாயிலாக உலகக் கோப்பையில் 100க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற ஏபி டீ சாதனை உழைத்த அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 1243*
2. ஏபி டீ வில்லியர்ஸ் : 1207
3. வீரேந்திர சேவாக் : 843
4. பிரண்டன் மெக்கல்லம் : 742

இதையும் படிங்க: போட்டியின் ஆரம்பத்திலே உறுதியான இந்திய அணியின் வெற்றி. பங்களாதேஷ் அவரு இல்லாம – ஒன்னும் பண்ண முடியாது

இது போக இப்போட்டியில் அடித்த 2 சிக்ஸரையும் சேர்த்து டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்கள் அடித்த கேப்டன் என்ற இயன் மோர்கன் சாதனையை தகர்த்துள்ள அவர் மற்றுமொரு உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 61 (2023இல்)
2. இயன் மோர்கன் : 60 (2019இல்)
3. ஏபி டீ வில்லியர்ஸ் : 59 (2015இல்)

Advertisement