போட்டியின் ஆரம்பத்திலே உறுதியான இந்திய அணியின் வெற்றி. பங்களாதேஷ் அவரு இல்லாம – ஒன்னும் பண்ண முடியாது

IND-vs-BAN
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 17-ஆவது லீக் போட்டியானது இன்று அக்டோபர் 19-ஆம் தேதி புனே மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், நஜ்முல் ஷாண்டோ தலைமையிலான வங்கதேச அணியும் விளையாடி வருகின்றன.

அதன்படி இன்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்வது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை எடுத்தது.

- Advertisement -

வங்கதேச அணி சார்பாக துவக்க வீரர்கள் தன்ஸித் ஹசன் (51) மற்றும் லிட்டன் தாஸ் (66) ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர். அவர்களை தவிர்த்து முகமதுல்லா 46 ரன்கள் குவித்தார்.

பின்னர் 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. இவ்வேளையில் பங்களாதேஷ் அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் விளையாடாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. அதோடு போட்டியின் ஆரம்பத்திலேயே அவர் இல்லை என்று தெரிந்ததால் இந்திய அணியின் வெற்றியும் உறுதியானது என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் வங்கதேச அணியின் அனுபவ வீரரான ஷாகிப் அல் ஹசன் சுழற்பந்து வீச்சாளர் என்பது மட்டுமின்றி பேட்டிங்கிலும் நான்காவது வரிசையில் களமிறங்கி அந்த அணிக்கு கை கொடுக்கக் கூடியவர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்த வீரராக அந்த அணியின் நட்சத்திர வீரராக திகழும் அவர் இல்லாதது வங்கதேச அணிக்கு மனரீதியாகவும் ஒரு பின்னடைவை தந்திருக்கும்.

இதையும் படிங்க : 24 ஆண்டுகள் கழித்து வங்கதேச அணி வீரர்கள் உலககோப்பையில் நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ

அதோடு அவர் போன்ற ஒரு வீரர் இல்லாமல் அந்த அணி பலம்வாய்ந்த இந்திய அணியை எதிர்கொண்ட வேளையில் அந்த முதல் பந்திலேயே அவர்களது தோல்வி உறுதியானது என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement